Skip to main content

வெப்பத்திற்கு காரணம் நகரத்தில் இருந்த பசுமைகளை அழித்து வீடுகட்டியதுதான் - ரமணன்

Published on 26/03/2019 | Edited on 26/03/2019

மூன்று ஆண்டுகளுக்கு மூன்பு தமிழக கல்லூரி பள்ளி மாணவர்களுக்கு மிகவும்  பிடித்தமான நபராக இருந்த சென்னை ஆய்வு மைய முன்னாள் இயக்குநரான ரமணன், பதவியில் இருக்கும்போது பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளிப்பது வழக்கம், "அனேகமாக சில இடங்களில் மழை எதிர்பார்க்கலாம்," என்கிற ஸ்டைலான பேச்சி பரவலாக பேசப்பட்டது. 

 

ramanan

 

தற்போது  கும்பகோணத்திற்கு வந்திருந்திருந்தவர் பத்திரிகையாளர்களை சந்தித்தார், "மாணவர்கள் செய்தித்தாள்களைப் படிப்பதை வாடிக்கையாகவும், கொள்கையாகவும் வைத்திருக்க வேண்டும். படித்து குறிப்பெடுத்துக் கொள்ளவேண்டும்.  செல்போன் பயன்பாட்டை மாணவிகள் முழுவதும் குறைத்துக்கொள்ள வேண்டும். அதனை பெற்றோர்களும் கண்காணித்திட வேண்டும். தமிழகத்தில் கல்வியின் தரத்தில் இன்னும் அதிக அளவில் முன்னேற்றம் கொண்டு வரவேண்டும். ஒரே நாளில் படித்து ஐ.ஏ.எஸ். ஆகிவிட முடியாது. ஆரம்ப நாட்களிலிருந்து படித்து வந்தால்தான் சாத்தியமாகும். இதற்காக அனைத்து பள்ளி கல்லூரிகளிலும் சிறப்பான வகுப்புகள் நடத்தப்பட அரசு முன்வரவேண்டும்.
 

இந்தியா முழுவதும் நீட் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. ஆனால், நீட் தேர்வுக்கு தகுந்தார் போல் நாம் படிக்க வேண்டும். அதற்கு நமது மனநிலையை தயார் செய்து கொள்ள வேண்டும். ரயில்வே மற்றும் மத்திய அரசு பணிகளில் வடமாநிலத்தை சேர்ந்தவர்களே அதிகமானோர் பணியில் அமர்கின்றனர். அமர்த்தவும்படுகின்றனர், அவர்களுக்கு கல்வி கற்பதில் அந்தந்த மாநிலங்கள் மாணவர்களை ஊக்குவித்து வருகின்றன. தயார்படுத்தி வருகின்றன. ஆனால் தமிழக மாணவர்களை ஊக்குவிக்க உந்து சக்திகள் இல்லை என்பதுதான் வேதனை. நாம் என்ன மேல்படிப்பு படிக்க வேண்டும் என்பதை தீர்மானம் செய்துகொண்டு கனவு காணவேண்டும். கனவு நிறைவேறாமல் போனாலும் கனவு காண்பதை விட்டுவிடக்கூடாது. கண்டிப்பாக ஒரு நாள் நடக்கும் .
 

நகரப் பகுதிகளில் உள்ள வயல் வெளிகளை அழித்துவிட்டு வீடுகள் கட்டப்பட்டுள்ளது. இதனால்தான் தற்போது எப்போதும் இல்லாத வகையில் வெப்பம் அதிகரித்து வருகிறது. வருங்காலத்தில் இன்னும் வெப்பம் அதிகமாகும்" என்றார் மழையின் நாயகன்.

 

 

 

சார்ந்த செய்திகள்