Skip to main content

ராமதாசை மறந்த பா.ம.க. வேட்பாளர்! திண்டுக்கல் தொகுதி மக்கள் அதிர்ச்சி

Published on 21/03/2019 | Edited on 21/03/2019

 


அதிமுகவுக்கு அடித்தளம் போட்ட திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியை அதிமுக தனது கூட்டணிக் கட்சியான பாமகவுக்கு ஒதுக்கி உள்ளது.  அதை கண்டு கட்சிப் பொறுப்பாளர்கள் தொண்டர்கள் அதிருப்தியில் இருந்து வருகிறார்கள்.   

 

s

 

இந்த நிலையில் தான் கூட்டணி கட்சியான பாமக வேட்பாளர் ஜோதிமுத்து திண்டுக்கல் தொகுதியில் களம் இறங்குவதற்காக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் உள்பட மாவட்ட பொறுப்பாளர்களை சந்தித்து ஆசி பெற்றார்.  அதைத்தொடர்ந்து பாமக வேட்பாளரான ஜோதி முத்து முதன் முதலில் திண்டுக்கல் தொகுதியில் பிரச்சாரக் களத்தில் குதித்தார்.  அதைத் தொடர்ந்து திண்டுக்கல்லில் உள்ள அதிமுகவுக்கு ராசியான குமரன் தெரு பகுதியில் முதன்முதலில் வாக்காளர்களிடம் வாக்கு கேட்பதற்காக பாமக வேட்பாளர் ஜோதி முத்துவை அழைத்துக்கொண்டு வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்  உள்பட கட்சிப் பொறுப்பாளர்கள் மற்றும் பாமகவினரும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.


அந்த பிரச்சார ஜீப்பில் பாமக வேட்பாளர் ஜோதி முத்துவுடன் அமைச்சர் சீனிவாசன் உள்பட நிர்வாகிகள் நின்றுகொண்டு வாக்காள மக்களிடம் மாம்பழத்திற்கு ஓட்டு போடச் சொல்லி வலியுறுத்தினார்கள் .   ஆனால் பா.ம.க வேட்பாளர் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு
 இருந்த பிரச்சார ஜீப்பில் பிரதமர் நரேந்திரமோடி, முன்னாள் முதல்வர் ஜெ. மற்றும்   ஈபிஎஸ். ஓபிஎஸ் படங்களை மட்டும் போட்டு நடுவில்  மாம்பழம் படம் போட்டு சின்னத்திற்கு வாக்களியுங்கள் என்று போர்டு வைத்து இருக்கிறார்கள்.  

 

ஆனால் திண்டுக்கல் தொகுதியில்  பாமக போட்டி போடும் போது பாமகவின் நிறுவனத் தலைவரான டாக்டர் ராமதாஸ் படமோ அன்புமணி ராமதாஸ் படத்தை போடவில்லை . அதை கண்டு பிரச்சாரத்திற்கு உடன் வந்த பாமகவினர் அதிர்ச்சி அடைந்தனர். ஆனால் தேர்தல் களத்தில்  குதித்துள்ள பாமக வேட்பாளரான ஜோதி முத்துவும் அதை கண்டுகொள்ளவே இல்லை.  இப்படி பாமக போட்டி போடும் திண்டுக்கல் தொகுதியில் பாமக தலைவர் படம் இல்லாமல் தேர்தல் களத்தில் குதித்து இருப்பது பொதுமக்கள் மத்தியிலும்  அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

 

சார்ந்த செய்திகள்