Skip to main content

இஸ்லாமிய மக்களுக்கு அமைச்சர் கே.எஸ்.மஸ்தானின் வேண்டுகோள்!

Published on 13/05/2021 | Edited on 13/05/2021

 

ramadan festival minister has request to peoples

 

தமிழக சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ரமலான் (14/05/2021) பண்டிகையையொட்டி பள்ளிவாசல்களில் தொழுகை நடத்துவதற்கு அனுமதிக்க வேண்டும்" என்று இஸ்லாமிய சமுதாயத்தின் சார்பில் தமிழ்நாடு அரசு கோரிக்கை வந்திருக்கிறது. கரோனா இரண்டாவது அலை மிகத் தீவிரமாகப் பரவி வருவதால் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு, அந்த ஊரடங்கு 10/05/2021 முதல் 24/05/2021 வரை நடைமுறையில் இருந்து வருகிறது.

 

அனைவரின் பாதுகாப்பையும் உறுதி செய்ய பல்வேறு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வரும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் "முழு ஊரடங்கை முழுமையாகக் கடைப்பிடிப்பீர்" என்று ஏற்கனவே வேண்டுகோள் விடுத்திருக்கிறார். கரோனா நோய்த் தொற்றும், அதைத் தடுக்க ஊரடங்கும் நடைமுறையில் இருக்கின்ற இந்தத் தருணத்தில், அனைத்து சமயங்களைச் சார்ந்தவர்களும், மதம் சார்ந்த விழாக்களையும் தவிர்த்து, தொற்றைக் குறைக்க அரசு எடுத்து வரும் முயற்சிகளுக்கு முழு  ஒத்துழைப்பு வழங்கி வருகிறார்கள்.

 

சிறுபான்மையின மக்கள் மீது திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு இருக்கும் மதிப்பும் மரியாதையையும் நன்கு அறிந்த இஸ்லாமிய பெருமக்கள் அனைவரும் இந்த ரமலான் பண்டிகையை தங்களது இல்லங்களிலேயே தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைக் கடைப்பிடித்து, தனிமனித இடைவெளி விட்டு ரமலான் பண்டிகையைச் சிறப்பாகக் கொண்டாடி மகிழ்ந்திட வேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்". எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தேர்த் திருவிழா; மின்சாரம் தாக்கி 15 குழந்தைகள் காயம்

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
Andhra Pradesh Kurnool car festival incident

தேர்த் திருவிழாவின் போது மின்சாரம் தாக்கி 15 குழந்தைகள் காயமடைந்துள்ளனர்.

ஆந்திர பிரதேசம் மாநிலம் கர்னூல் மாவட்டம் சின்ன தெகூர் கிராமத்தில் நடந்த உகாதி விழாவையொட்டி ஆஞ்சநேயர் கோயிலில் தேர்த் திருவிழா நடைபெற்றது. அப்போது தேர் மீது வயர் உரசி தேரில் மின்சாரம் பாய்ந்துள்ளது. இந்த விபத்தில் மின்சாரம் தாக்கியதில் 15 குழந்தைகள் காயமடைந்தனர். இதனையடுத்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக குழுந்தைகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தத் தகவலை கர்னூல் கிராமப்புற காவல் நிலைய காவலர் கிரண் குமார் உறுதிப்படுத்தியுள்ளார். தேர்த் திருவிழாவின் போது மின்சாரம் தாக்கி 15 குழந்தைகள் படுகாயமடைந்த சம்பவம் ஆந்திராவில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக கடந்த மார்ச் மாதம் 8 ஆம் தேதி (08.03.2024) ராஜஸ்தான் மாநிலம் கோட்டா அருகில் உள்ள காளிபஸ்தி என்ற இடத்தில் சிவராத்திரி விழா முன்னேற்பாடுகள் நடைபெற்று வந்தன. அங்கிருந்த சிறுவர்கள் கலசத்தில் தண்ணீர் எடுக்கச் சென்றுள்ளனர். அப்போது சிறுவர்கள் எடுத்துச் சென்ற கொடி கட்டிய இரும்புக் குழாய், உயரழுத்த மின்கம்பி மீது உரசியது. இதனால் சிறுவர்கள் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் 17 சிறுவர்கள் படுகாயமடைந்தது குறிப்பிடத்தக்கது. 

Next Story

தமிழகத்தில் ரம்ஜான்; தேதியை உறுதி செய்த தலைமை காஜி

Published on 09/04/2024 | Edited on 09/04/2024
nn

ரம்ஜான் என்று அழைக்கப்படும் நோன்பு பெருநாள் பண்டிகை உலகம் முழுவதும் வாழும் இஸ்லாமியர்களால் கொண்டாடப்படுகிறது. ஈகைத் திருநாள் என்று தமிழ் மக்களால் அழைக்கப்படும் இந்த நாளில் ஏழை மக்களுக்கு அரிசி, கோதுமை உள்ளிட்டவற்றை அளித்து ஈகையை வெளிப்படுத்தும் நன்னாளாக கொண்டாடப்பட்டு வருகிறது.

பிறை தென்படுவதன் அடிப்படையில் ரமலான் மாதம் 29 நாட்களா அல்லது 30 நாட்களா என்பது முடிவு செய்யப்படுகிறது.  இந்நிலையில் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் இன்று பிறை தென்படாததால் நாளை மறுநாள் (11/04/2024) தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும் என அரசு தலைமை காஜி அறிவித்துள்ளார்.