Ram Temple Procession in Tamil Nadu's Famous Educational Institute! The video was released and the excitement!

அயோத்தியில் பாஜக கரசேவை நடத்தி பாபர் மசூதி இடிக்கப்பட்டது. அந்த இடத்தில் தான் ராமன் பிறந்தார் எனச்சொல்லி அங்கே தனியார் அமைப்பு பெரியளவில் கோவில் கட்டியுள்ளது.

Advertisment

அயோத்தியில் நேற்று (22ம் தேதி) ராமர் கோயில் திறப்பு விழா நடைபெற்றது. அந்த கோவில் திறப்புவிழாவில் நாட்டின் பிரதமர் பங்கேற்றார். இது ஒரு புறம் ஆதரவையும் மற்றொருபுறம் விமர்சனத்தையும் ஏற்படுத்தி வருகிறது. மேலும், இந்தக் கோயில் திறப்பிற்காக ஒன்றியத்தின் கீழ்வரும் அரசு நிறுவனங்களுக்கு கோவில் திறப்பு நாளான ஜனவரி 22ஆம் தேதி அரை நாள் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. இதுவும் விமர்சனங்களுக்கு உள்ளானது.

Advertisment

வேலூரில் உள்ள பிரபல கல்வி நிறுவனமான நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் ஆயிரக்கணக்கான உள்நாட்டு, வெளிநாட்டு மாணவர்கள் படிக்கின்றனர். இவர்கள் ஜனவரி 22 ஆம் தேதி இரவு கல்லூரி வளாகத்துக்குள் ஊர்வலம் நடத்தி ஜெய் ஸ்ரீ ராம் கோஷங்களை எழுப்பியுள்ளனர். அந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வெளியாகி வேலூரில் ஆச்சர்யத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய கட்சிகள் இருந்து 1984ல் கல்லூரியை துவங்கி, வேலூரை தலைமயிடமாகக் கொண்டு சென்னை, பெங்களுரூ, அமராவதி, போபால் உள்ளிட்ட பகுதிகளிலும், இந்தக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இவ்வளவு பிரபலமான கல்லூரியில் தான் நேற்று இரவு மாணவர்கள் ஒன்று கூடி ஜெய் ஸ்ரீ ராம் என கோஷங்கள் எழுப்பி ஊர்வலமாக சென்றுள்ளனர்.

Advertisment

தமிழ்நாட்டில் ஒரு கல்வி நிறுவனத்திற்குள் அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவிற்கு மாணவர்கள் கோஷம் எழுப்பியபடி ஊர்வலமாக சென்ற நிகழ்வு பெரும் பரபரப்பைஏற்படுத்தியுள்ள நிலையில், இது தொடர்பாக விசாரித்தபோது, அவரின் மகன் ஜி.வி.செல்வத்துக்கு அரசியல் ஆசை உள்ளது. கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போதே மகனை பாஜக சப்போர்ட்டில் நிறுத்த முயன்றார். அப்போது அதே பாஜக ஆதரவாளரான ஏ.சி.சண்முகம் நின்றது, மற்றொருபுறம் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனின் மகன் கதிர்ஆனந்த் நின்றதால் பின்வாங்கினார். இப்போது வாய்ப்பு கிடைக்குமா என எதிர்பார்க்கலாம், அதற்காக இப்படி நடத்தியிருக்கலாம் என்கிறார்கள், அவரின் பின்னணி தெரிந்தவர்கள்.