தமிழகத்தில் மாநிலங்களவை தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் நிறைவு பெற்றது.
அதிமுக சார்பில் கே.பி.முனுசாமி, தம்பிதுரை, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ளனர். அதேபோல் திமுக சார்பில் திருச்சி சிவா, என்.ஆர்.இளங்கோ, அந்தியூர் செல்வராஜ் மனுத்தாக்கல் செய்துள்ளனர். மேலும் சுயேச்சைகளாக பத்மராஜன், அக்னி ஸ்ரீ ராமச்சந்திரன், இளங்கோ யாதவ் ஆகியோரும் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளனர்.

தமிழகத்தில் காலியாகும் ஆறு மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தல் மார்ச் 26- ஆம் தேதி நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.