rajipuram BJP executive case related 

Advertisment

பாஜக நிர்வாகிக்கு நீதிமன்றக்காவல் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தைச் சேர்ந்த பிரவீன் ராஜ், பாஜக இளைஞரணி சமூக ஊடக பொறுப்பாளராகச் செயல்பட்டு வருகிறார். இவர் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்தி பற்றிசமூக வலைத்தளத்தில் கடந்த ஆகஸ்ட் 10 ஆம் தேதி அவதூறு கருத்துகளைப் பதிவிட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதனையடுத்து இதுகுறித்து கரூர் மாவட்ட காங்கிரஸ் பிரமுகர் மெய்ஞானமூர்த்தி, கரூர் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.

இந்த புகாரின் பேரில் இன்று அதிகாலை சைபர் கிரைம் போலீசாரால்ராசிபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் பிரவீன் ராஜ் அதிரடியாகக் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் கைது செய்யப்பட்ட பிரவீன் ராஜ் கரூர் மாவட்ட குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி சுஜாதா முன்பு ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது பிரவீன் ராஜுக்கு அக்டோபர் 13 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் விதித்து நீதிபதி சுஜாதா உத்தரவிட்டார்.