Published on 11/03/2020 | Edited on 11/03/2020
சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா திருமணம் மண்டபத்தில், கடந்த மார்ச் 5ம் தேதி அன்று தமிழகத்தின் 37 மாவட்டங்களில் உள்ள மன்ற நிர்வாகிகளை அழைத்து நடிகர் ரஜினிகாந்த் ஆலோசனை நடத்தினார்.
புதிய கட்சி தொடங்குவது தொடர்பாக நடைபெற்ற இந்த ஆலோசனைக்கூட்டத்தில் தனக்கு ஒரு விசயத்தில் ஏமாற்றம் நிகழ்ந்ததாக ரஜினிகாந்த் செய்தியாளர்களிடம் தெரிவித்ததும் பரபரப்பாக பேசப்பட்டது. முதல்வர் வேட்பாளராக ஐ.ஏ.எஸ்., ஐபிஎஸ் அதிகாரிகளை ரஜினி முன்நிறுத்தப் போவதாக இந்த கூட்டத்தில் ஆலோசிக் கப்பட்டதாகவும் பேசப்பட்டு வருகிறது.
இந்நிலையில் நாளை மீண்டும் 37 மாவட்ட நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தவிருக்கிறார் ரஜினி. ராகவேந்திரா திருமண மண்டபத்தில் நாளை காலை 8 மணிக்கு இந்த ஆலோசனை கூட்டம் தொடங்கவிருக்கிறது.