
ரஜினிகாந்த் அரசியல் கட்சி ஆரம்பிக்கப் போவதாக தெரிவித்திருந்த சமயத்தில்,பாஜகவின்அறிவுசார்பிரிவின்மாநிலத் தலைவர் பதவியிலிருந்து விலகிஅறிவிக்கப்படாத ரஜினிகாந்தின் கட்சிக்குத் தலைமை ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டிருந்தவர் அர்ஜுனமூர்த்தி. அதன்பின் ரஜினி தனதுஅரசியல் நிலைப்பாட்டில் எடுத்த முடிவு அவரது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
அதனையடுத்து கடந்த27.01.2021 அன்று அறிக்கை வெளியிட்டிருந்த அர்ஜுனமூர்த்தி‘ரஜினியின் ஆசீர்வாதம் மட்டும் போதும். மாற்றத்தின் சேவகனாக விரைவில் வருவேன். ரஜினிகாந்தின் ஆசையைநாம் நிறைவேற்றுவோம். ரஜினியின் நல்ல எண்ணம், நல்ல மனது,தமிழகத்தின் மீது கொண்ட அக்கறை நிறைவேறும் எனநம்புங்கள். ரஜினிகாந்த் எனது தலைவர் என்பதைவிட, நானும்ஒரு ரஜினிரசிகர் என்பதில்பெருமைகொள்கிறேன். ரசிகன் என்ற அக்கறையில் ரஜினியின் புகழுக்கு எந்தவிதகெட்ட பெயரும் ஏற்படுத்தமாட்டோம்’ எனக் கூறியிருந்தார்.அதேபோல்“புதிய சிந்தாந்தத்துடன் புதிய அரசியல் கட்சியைத் தொடங்கவுள்ளேன்.நான் ஆரம்பிக்கப்போகும் எனது புதிய கட்சியின் கோட்பாடுகள், கொள்கைகள் நிச்சயம் பாஜகவிலிருந்து மாற்றாகவே இருக்கும். ரஜினி ரசிகர்கள் எனது கட்சியில் இணைந்து கொள்ளலாம்” என்றும்தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் 'இந்திய மக்கள் முன்னேற்ற கட்சி' என்ற புதிய கட்சியைதொடங்கியுள்ள அர்ஜுனமூர்த்திக்கு ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். 'தனி அரசியல் கட்சித்துவங்கியிருக்கும் அர்ஜுனமூர்த்திக்கு என்னுடைய வாழ்த்துக்கள்' எனரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். இந்த கட்சிவிழாவில் அர்ஜுன மூர்த்தி பேசுகையில், ''மாணவர்களுக்கு பெட்ரோல்இலவசமாகதரப்படும். பள்ளி,கல்லூரிமாணவ மாணவிகளுக்கு இலவசபஸ்பாஸ்உடன் இலவச பெட்ரோல் கார்டுதரப்படும். எனதுகட்சிஆட்சிக்குவந்தால்நான்கு துணைமுதல்வர் பதவி கொண்டுவரப்படும்'' என்றார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)