நாங்குநேரி தொகுதி களக்காடு பகுதியில் இடைத் தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜியிடம் கேசவன் ஏரி பகுதியைச் சேர்ந்த இஸ்லாமியர்கள், ரேஷன் கடை கேட்டு மனு அளிக்க சென்றனர். அவர்களை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தரக்குறைவாக பேசியதாக கூறப்படுகிறது.
அமைச்சரின் இச்செயலை கண்டித்து திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய கட்சியை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஊர்வலமாக வந்து வத்தலக்குண்டு காவல்நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை கைது செய்ய வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். இதனால் அங்கு பதட்டமும் பரபரப்பும் ஏற்பட்டது பின்னர் காவல் நிலையத்துக்கு சென்ற அவர்கள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது புகார் மனுவை கொடுத்தனர்.இதனையடுத்து பலரும் ராஜேந்திர பாலாஜிக்கு கண்டனம் தெரிவித்தனர்.
இந்நிலையில், சிறுபான்மையினரை பற்றி தவறாக பேசியதாக வெளியான செய்திக்கு அமைச்சர் ராஜேந்திர_பாலாஜி மறுப்பு. பிரச்சாரத்தின்போது தன்னை சந்திக்க வந்த இஸ்லாமியர்களிடம் தவறாக பேசவில்லை என விளக்கம் அளித்துள்ளார்.