Skip to main content

ஆட்சியர் அலுவலகத்திற்குள்ளேயே புகுந்த மழைநீர்; தூத்துக்குடியில் தொடரும் மழை

Published on 14/12/2024 | Edited on 14/12/2024
Rainwater seeping inside the District Collector's office

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் 15ஆம் தேதி (15.10.2024) தொடங்கியதாக வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. அந்த வகையில் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மிகத் தீவிரமாக உள்ளது. இதன் காரணமாக தமிழகம் முழுவதும் பரவலாக கனமழை பெய்து வருகிறது.

நேற்று இரவு முதல் தற்பொழுது வரை தொடர்ச்சியாக தூத்துக்குடியில் விட்டுவிட்டு பல பகுதிகளில் மழை பொழிந்து வருகிறது. பல இடங்களில் கனமழையும் பொழிந்து வருகிறது. இதனால் தூத்துக்குடியில் தாழ்வான பகுதிகளில் நீர்தேங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. அந்தோணியார்கோவில் பகுதியில் மழைநீர் வெள்ளம்போல் சூழ்ந்து  காணப்படுகிறது.

அதேபோல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சிறு சிறு ஓடைகளில் பெருக்கெடுத்த தண்ணீர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நுழைந்து வருகிறது. இதனால் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் சுமார் இரண்டு அடிக்கு மேல் தண்ணீர் நிரம்பியுள்ளது. இதனால் உள்ளே வாகனங்கள் உள்ளே செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து தண்ணீரை அகற்றும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தாலும் கனமழை காரணமாக தொடர்ந்து நீர் தேங்கும் சூழலே அங்கு காணப்படுகிறது.

கனமழை காரணமாக தூத்துக்குடி-நெல்லை, தூத்துக்குடி-வாஞ்சி மணியாச்சி உள்ளிட்ட ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

சார்ந்த செய்திகள்