Skip to main content

10 மணி வரை மழை; நான்கு மாவட்டங்களுக்கு அலர்ட்

Published on 15/06/2024 | Edited on 15/06/2024
Rain till 10 p.m.; Alert for four districts

தமிழகத்தில் இரவு 10 மணி வரை 4 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் 7 நாட்களுக்கு ஒரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருக்கும் எனச் சென்னை வானிலை மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது. வட தமிழக மாவட்டங்களில் குறிப்பாக உள் மாவட்டங்களில், மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பின்படி தமிழகத்தில் இரவு 10 மணி வரை சேலம், திண்டுக்கல், நாமக்கல், திருச்சி ஆகிய நான்கு மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சார்ந்த செய்திகள்

 

Next Story

திருச்சியில் எடப்பாடி பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பு

Published on 19/06/2024 | Edited on 19/06/2024
Enthusiastic reception for Edappadi Palaniswami in Trichy

தமிழக முன்னாள் முதலமைச்சர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், அதிமுக பொதுச்செயலாளர், எடப்பாடி பழனிசாமி தஞ்சை, நாகப்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்தார். திருச்சி வந்தடைந்த அவருக்கு திருச்சி மாநகர் மற்றும் புறநகர் மாவட்ட கழகம் சார்பில் அதிமுகவினர் செண்டை மேள தாளங்கள் முழங்க, உற்சாக வரவேற்பு அளித்தனர். 

இதில், அதிமுக புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளர், முன்னாள் எம்பி குமார், புறநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளர், முன்னாள் அமைச்சர் பரஞ்சோதி, திருச்சி மாநகர் மாவட்ட கழக செயலாளர், முன்னாள் துணை மேயர் சீனிவாசன் ஆகியோர் தலைமையில் அதிமுகவினர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆளுயுர மலர் மாலை அணிவித்தும், பொன்னாடை அணிவித்தும், பூங்கொத்து கொடுத்தும், புத்தகங்கள் வழங்கியும சிறப்பான வரவேற்பு அளித்தனர்.  

முன்னாள் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், வளர்மதி, சிவபதி, அமைப்புச் செயலாளர் ரத்னவேல், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் எம்.பி.கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். அதனைத் தொடர்ந்து. சாலை வழிப் பயணமாக புறப்பட்டுச் சென்ற எடப்பாடி.பழனிசாமிக்கு, தஞ்சை மத்திய மாவட்டம் சார்பில் வல்லம் பிரிவு சாலையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக தஞ்சை மாவட்டத்தில் மன்னார்குடி ஒன்றிய பெருந்தலைவர் மனோகரன் இல்ல திருமண நிகழ்வில் பங்கேற்கிறார். அதனைத் தொடர்ந்து, நாகப்பட்டினம் மாவட்டத்தில் நடைபெறும் முன்னாள் அமைச்சர் ஜெயபால் இல்ல வரவேற்பு நிகழ்ச்சி மற்றும் பல்வேறு கட்சிகளில் இருந்து வந்த நிர்வாகிகள் அதிமுகவில் இணையும் நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பின் இன்று மாலை மீண்டும் திருச்சி விமான நிலையம் வநதடைந்து விமானம் மூலம் சென்னை புறப்பட்டு செல்கிறார்.

Next Story

சென்னையில் பரவலாக மழை

Published on 18/06/2024 | Edited on 18/06/2024
nn

சென்னை சுற்றுவட்டாரப் பகுதிகளில் பரவலாக மழை பொழிந்து வருகிறது.

தமிழ்நாட்டில் 7 நாட்களுக்கு ஒரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருக்கும் எனச் சென்னை வானிலை மையம் ஏற்கெனவே அறிவித்திருந்தது. வட தமிழக மாவட்டங்களில் குறிப்பாக உள் மாவட்டங்களில், மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில்  சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பரவலாக மழை பொழிந்து வருகிறது. சென்னை தியாகராய நகர், நுங்கம்பாக்கம், வள்ளுவர் கோட்டம், கீழ்ப்பாக்கம், சேத்துப்பட்டு, நுங்கம்பாக்கம், அயனாவரம், கோடம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பொழிந்து வருகிறது. அதேபோல் சென்னை புறநகர்ப் பகுதிகளான பூந்தமல்லி திருவேற்காடு, ஆவடி, அம்பத்தூர், அனகாபுத்தூர், மதுரவாயில், போரூர், வளசரவாக்கம், குன்றத்தூர், மாங்காடு ஆகிய பகுதியில் பலத்த மழை பொழிந்து வருகிறது.