Advertisment

தமிழ்நாட்டில், கடந்த சில நாட்களாக வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச் சலனம் காரணமாக பரவலாக மழை பெய்துவருகிறது. இந்நிலையில், இன்று (21.09.2021) வேலூர், திருவள்ளூர், ராணிப்பேட்டை, சேலம் ஆகிய 4 மாவட்டங்களில் இடி மின்னலுடன் மிக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும், கடலோர மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் பகுதிகளில் மிதமான மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.இந்நிலையில், இன்று பிற்பகல் சென்னை மெரினா கடற்கரை, ஆழ்வார்பேட்டை, மயிலாப்பூர் ஆகிய பகுதிகளில் பலத்த மழை பெய்தது.