Skip to main content

தொடரும் மழை; தொடக்கப்பள்ளிகளுக்கு விடுமுறை!

Published on 21/09/2023 | Edited on 21/09/2023

 

Rain in many districts including Chennai in Tamil Nadu for the next 3 hours

 

தமிழகத்தில் உள்ள பல மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரத்தில் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

 

சென்னை உட்பட புறநகர் பகுதிகளில் அதிகாலை முதலே மழை பெய்து வருகிறது. கிட்டத்தட்ட 2 மணிநேரமாக மழை பெய்துகொண்டிருக்கும் நிலையில், திருவள்ளூர், செங்கல்பட்டு, சென்னை, காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரத்திற்கு மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

 

இதனைத் தொடர்ந்து மழை காரணமாக வேலூர் மாவட்டத்தில் உள்ள தொடக்கப் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். சென்னை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகள் வழக்கம் போல் இயங்கும் என் அம்மாவட்ட ஆட்சியர்கள் தெரிவித்துள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தொடர்மழை ; நெல்லை, தென்காசி மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை

Published on 09/12/2023 | Edited on 09/12/2023
Nellai, tenkasi district schools have holiday due to rain

தமிழ்நாட்டில் ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக வரலாறு காணாத மழைப்பொழிவு ஏற்பட்டது. இதன் காரணமாகச் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிகக் கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கிடவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அந்த வகையில் தேசிய மற்றும் மாநிலப் பேரிடர் மீட்புக் குழுவினர், காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைகளைச் சார்ந்த மீட்புப் பணிக் குழுவினர் இப்பணிகளில் பெருமளவில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். படகுகள் மற்றும் வாகனங்கள் மூலமாக நீர் சூழ்ந்த பகுதிகளிலிருந்து பொதுமக்கள் பத்திரமாக மீட்கப்பட்டு வருகிறனர். மேலும் அவர்களுக்குத் தேவையான உதவிகளும் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்த சூழலில் சென்னையில் சில இடங்களில் வெள்ள நீர் வடியாமல் இன்னும் தேங்கியுள்ளதாலும், மீட்புப் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருவதாலும் சென்னையில் உள்ள பள்ளிகளுக்குத் தமிழக அரசு சார்பில் இன்றும் (09.12.2023) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த 5 மாவட்டங்களில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் சி.பி.எஸ்.இ என அனைத்து பள்ளிகளும் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. மழை பாதிப்பு எதிரொலியாக 6வது நாளாக விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாகச் சென்னையில் கடந்த திங்கட்கிழமை முதல் பள்ளி, கல்லூரிகள் செயல்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்த நிலையில் நெல்லை மற்றும் தென்காசியில் கனமழை பெய்து வருவதால், இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர். மேலும் சிறப்பு வகுப்புகள் உட்பட அனைத்து வகுப்புகளும் ரத்து எனவும் அறிவித்துள்ளனர். 

Next Story

அம்மன் கழுத்திலிருந்த தாலியைப் பறித்துச் சென்ற நபர்!

Published on 08/12/2023 | Edited on 08/12/2023
theft inside temple near vellore

வேலூர் மாநகரம், கொசப்பேட்டையில் ஆனைகுலத்தம்மன் கோவிலில் சாமி கும்பிடுவது போல் மர்ம நபர் ஒருவர் நேற்று மாலை கோவிலுக்குள் நுழைந்து சாமி சிலை முன்பு அமர்ந்து சாமி கும்பிடுவதுபோல் இருந்தார். சிறிது நேரத்துக்கு பின்னர் சுவாமி சிலையின் கழுத்திலிருந்த தங்கத்தாலியைக் கழட்டி எடுத்துக்கொண்டு அங்கிருந்து சென்றுள்ளார். 

பூஜைக்கு வந்த அய்யர் அம்மன் கழுத்தில் இருந்த தாலி காணாமல் போனதை தொடர்ந்து அதிர்ச்சியாகி இதுபற்றி கோவில் அலுவலர்களுக்கும், காவல்துறைக்கும் புகார் தெரிவித்தார். அதனைத்தொடர்ந்து அங்கிருந்த சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வு செய்தபோது ஒருவர் அம்மன் சிலை கழுத்திலிருந்த தாலியைத் திருடிச்செல்வது தெரிந்தது. இது தொடர்பான பரபரப்பு சி.சி.டி.வி. காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளது.

theft inside temple near vellore

இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் தரப்பட்டதை தொடர்ந்து திருடனை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். அம்மன் கழுத்திலிருந்த தாலிய யாரோ பறிச்சிட்டாங்க, இது அபசகுணம். இந்த செயலால் ஆண்களுக்கு ஆபத்து என யாரோ வதந்தியை பரப்பிவிட அப்பகுதி பெண்கள் பரபரப்பும், அச்சமும் அடைந்துள்ளனர்.