Skip to main content

எக்ஸ்பிரஸ் பேருந்துக்குள் மழை; வைரலாகும் வீடியோ

Published on 31/08/2023 | Edited on 31/08/2023

 

 Rain inside an express bus; A viral video

 

பெரம்பலூரில் புறப்பட்ட அரசுப் பேருந்து அரியலூர் அருகே சென்று கொண்டிருக்கும் நேரத்தில் மழை பொழிந்ததால், பேருந்தின் உள் பகுதியில் மழை நீர் கொட்டியது. இதில் பேருந்தில் பயணித்த அனைவரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். அந்த பேருந்தில் பயணித்தவர்களில் ஒரு பெண் மட்டும் குடை வைத்திருந்ததால் குடை பிடித்தவாறு பயணித்தார். இந்த காட்சிகள் இணையங்களில் வைரலாகப் பரவி வருகிறது. முந்தைய காலங்களிலும் இதுபோன்று அரசுப் பேருந்துகளில் மழை நேரங்களில் பேருந்தின் உள் பகுதியில் மழைநீர் புகுந்து பயணிகள் அவதியடையும் வீடியோ காட்சிகள் வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

 

 

கடக்கும் முன் கவனிங்க...

கடக்கும் முன் கவனிங்க...

விரிவான அலசல் கட்டுரைகள்

சார்ந்த செய்திகள்

சார்ந்த செய்திகள்

Next Story

ஓடும் ரயிலில் திருமணம்; வைரலாகும் வீடியோ

Published on 01/12/2023 | Edited on 01/12/2023

 

 Marriage on a Running Train; A viral video

 

அண்மையாகவே திருமணம் செய்த கையோடு தேர்வு எழுதுவது அல்லது போராட்ட நிகழ்வுகளுக்கு திருமணம் முடிந்த கையோடு செல்வது என சில புதுமண தம்பதிகள் எடுக்கும் அதிரடி முடிவுகள் சமூக வலைத்தளங்களில் வீடியோவாக வெளியாவதும், அந்த காட்சிகள் இணையவாசிகள் மத்தியில் ஆதரவுகளை பெறுவதும், எதிர்ப்புகளையும் பெறுவதும் நிகழ்ந்து வருகிறது. ஆனால் அதற்கெல்லாம் டஃப் கொடுக்கும் வகையில் ஓடும் ரயிலில், பயணிகள் மத்தியில் இளைஞர் ஒருவர் இளம்பெண்ணிற்கு மாலையிட்டு, தாலிகட்டி திருமணம் செய்து கொண்ட வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அசன்சோல் ரயிலில் திருமணம் நடைபெற்றதாகக் கூறப்படுகிறது. தற்போது இந்த காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்

Next Story

அரசுப் பேருந்தை வழிமறித்து நடத்துநரைத் தாக்கிய மாணவர்கள்!

Published on 28/11/2023 | Edited on 28/11/2023

 

nn


                                                    கோப்புப்படம் 
 

கடந்த 13 வருடங்களாக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் சிவகாசி கிளையில் நடத்துநராக பணிபுரிந்து வருகிறார் சுரேஷ். விருதுநகரில் இருந்து சிவகாசிக்கு சென்ற அரசுப் பேருந்தை ஓட்டுநர் கனிமுத்து இயக்க, நடத்துநராக சுரேஷ் இருந்துள்ளார். அந்தப் பேருந்தில் பயணித்த ஐடிஐ மாணவர்களான மதன்குமாரும் வசந்தும் விசிலடித்து தகாத வார்த்தைகள் பேசி ரகளையில் ஈடுபட்டுள்ளனர். அவ்விருவரும் மதுபோதையில் இருந்ததால், சிவகாசி சாலையில் உள்ள பஜார் காவல் நிலையத்தில் புகார் கூறி, அங்கேயே இறக்கி விட்டுள்ளார் நடத்துநர் சுரேஷ்.

 

அப்பேருந்து சிவகாசி சென்றுவிட்டு மீண்டும் அதே வழித்தடத்தில் திரும்பியபோது, பி.குமாரலிங்கபுரம் பேருந்து நிறுத்தத்தின் அருகே, 17 வயது சிறுவனான மதன்குமாரும் வசந்தும் டூ வீலரில் வழிமறித்து நிறுத்தியதோடு, பேருந்துக்குள் ஏறி நடத்துநர் சுரேஷை தாக்கியிருக்கின்றனர். காயமடைந்த சுரேஷ், தன்னைப் பணி செய்யவிடாமல் வழிமறித்து பேருந்துக்குள் ஏறி தாக்கிய இருவர் மீதும் நடவடிக்கை எடுக்கக்கோரி ஆமத்தூர் காவல்நிலையத்தில் புகாரளிக்க, வழக்கு பதிவுசெய்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். 

 


 

விரிவான அலசல் கட்டுரைகள்