The rain cooled Chennai

Advertisment

சில நாட்களாகச்சென்னையில் வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில்இன்று மாலை சென்னையில் பல இடங்களில் திடீரென மழை வெளுத்து வாங்கியது.

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாகச் சென்னையில் மழைக்கு வாய்ப்பு இருக்கும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே தெரிவித்திருந்தது. அதேபோல் தமிழ்நாட்டில் சில மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் சென்னையில் லேசானது முதல் மிதமான அளவிற்கு மழை பொழிந்தது. நண்பகல் வரை சென்னையில் பல இடங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில், பிற்பகல்சென்னையில் பல இடங்களில் மழை பொழிந்தது. குறிப்பாக ராயப்பேட்டை, தேனாம்பேட்டை, நுங்கம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் மழை பொழிந்தது. இந்த மழைப் பொழிவு அடுத்த இரண்டு மணி நேரத்திற்கு நீடிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.