காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுக்கும் மத்திய அரசையும் அதற்கு துணை போகும் பினாமி எடப்பாடி அரசையும் கண்டித்து அரியலூர் மாவட்டம், செந்துறை ஒன்றியம், ஆர்.எஸ். மாத்தூரில் ரயில் மறியல் போராட்டம் இன்று காலையில் திமுக சார்பில் 8.30 மணிக்கு நடைபெற்றது.
இதில் மாநில கொள்கை பரப்பு துணை செயலாளர் ச.அ.பெருநற்கிள்ளி தலைமை தாங்கினார். ஒன்றியச் செயலாளர் மு.ஞானமூர்த்தி முன்னிலை வகித்தார். மாவட்ட தொண்டர் அணி அமைப்பாளர் பி.ஆர்.பாண்டியன், மாவட்ட இலக்கிய அணி பொருளாளர் ஆர்.விசுவநாதன், மா.தொ.அணி. அமைப்பாளர் சுமதி கருணாநிதி, ஒன்றிய பொறுப்பு குழு உறுப்பினர்கள் மா.சிவப்பிரகாசம், கே.ஆர். பெரியசாமி, வி.எழில்மாறன், வி.பி.நடேசன், மு.சபாபதி, ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் ஆ.தமிழ்மாரன், ஒன்றிய மகளிர் அணி சித்ரா, ஒன்றிய மாணவர் அணி அமைப்பாள் இரா.இராஜவேல், ஊராட்சி செயலாளர்கள் துரை. தேன்துளி, ஜெயராமன், இரா.கோடி, ஆர்.இராசேந்திரன், ப.புலேந்திரன், க.நல்லுசாமி, வழக்கறிஞர் அணி பிறபி.செல்வம் மற்றும் கழக நிருவாகிகள், காங்கிரஸ் கட்சி மாநில பொதுக்குழு உறுப்பினர் துளார் குளஞ்சாநாதன், தி.க.தனபால், தமிழர் நீதிக்கட்சி மாநில ஒருங்கிணைப்பாளர் இர.இளங்கோவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு கைதாகினர்.
Published on 05/04/2018 | Edited on 05/04/2018