rahul gandhi reaction; mk stalin resilience

தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக அமெரிக்கா சென்று உள்ள தமிழக முதல்வர் பல்வேறு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொண்டு வருகிறார். இந்தநிலையில் சமீபத்தில் சிகாகோவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மாலை வேளையில் ரிலாக்ஸாக சைக்கிள் ஓட்டும் வீடியோ ஒன்று வெளியாகியிருந்தது. இதனை சமூக வலைத்தளபக்கத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டு இருந்தார்.

அந்த பதிவில் 'மாலை அமைதி புதிய கனவுகளுக்கு களம் அமைக்கிறது' என தெரிவித்திருந்தார். இந்த சமூகவலைத்தள பதிவை டேக் செய்த நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, 'சகோதரரே நாமும் இதுபோல் எப்போது இணைந்து சென்னையில் சைக்கிள் பயணம் மேற்கொள்ளலாம்' எனக் கேட்டிருந்தார். இதற்கு பதிலளித்துள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், 'அன்புள்ள சகோதரரே உங்களுக்கு நேரம் கிடைக்கும் பொழுது கண்டிப்பாக இருவரும் சைக்கிளில் சென்று சென்னையின் அழகை ரசிக்கலாம்' என தெரிவித்துள்ளார். அதோடு மட்டுமல்லாது 'நான் உங்களுக்கு ஸ்பீட் பாக்ஸ் கொடுக்க வேண்டிய பாக்கியிருக்கிறது. சைக்கிளில் சேர்ந்து பயணம் செய்தவுடன் என்னுடைய வீட்டில் தென்னனின் உணவை நீங்கள் இனிப்புடன் சுவைக்கலாம்' என தெரிவித்துள்ளார்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரையின் போது தமிழகம் வந்த ராகுல் காந்தி கோவையில் சாலையின் தடுப்புச் சுவரை தாண்டி எகிறி குதித்து ஸ்வீட் கடை ஒன்றுக்கு சென்றுஸ்வீட் பாக்ஸ் வாங்கி வந்து அதனை தமிழக முதல்வரிடம் கொடுத்த வீடியோ காட்சிகள் அந்த நேரத்தில் வைரலாகி இருந்தது. அதை குறிப்பிட்டு 'ஸ்வீட் பாக்ஸ் பாக்கி இருப்பதாகவும் நேரம் கிடைக்கும்போது சென்னை வரலாம்' எனவும் தமிழக முதல்வர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

Advertisment