
தேனி மாவட்டம் கம்பத்தில் திராவிட கழகத்தினருக்கு பாஜகவினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இன்று தந்தை பெரியாரின் 144 வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டு வரும் நிலையில் தேனி மாவட்டம் கம்பம் காந்தி சிலை அருகே பிறந்தநாள்ஏற்பாடுகள் திராவிடர் கழகம் சார்பில் மேற்கொள்ளப்பட்டது. அப்பொழுது அங்கு வந்த பாஜகவினர் இது தேரடி பகுதி என்பதால் இங்கு பெரியார் பிறந்தநாள் விழாவை கொண்டாடக்கூடாது என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதேபோல் திராவிடர் கழகத்தினர் இங்கேதான் கொண்டாடுவோம் என்று தெரிவித்தனர். இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டது. பாஜக கொடியுடன் பாஜகவினரும் குவிந்தனர். இதனால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டு சமரசத்தில் ஈடுபட்டனர். இருப்பினும் அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் பாஜகவை சேர்ந்தவர்களை கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் சிறையில் வைத்தனர். அதனைத்தொடர்ந்து திராவிடர் கழகத்தினர் பெரியார் உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி உறுதிமொழி ஏற்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)