Published on 02/06/2022 | Edited on 02/06/2022

சென்னையில் இளைஞர் ஒருவர் ஓட்டிவந்த பல்சர் பைக் திடீரென பற்றி எரிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை மந்தவெளி பகுதியைச் சேர்ந்தவர் அருண் ராமலிங்கம். இவர், நேற்று இரவு தன்னுடைய பைக்கில் அபிராமபுரம் பகுதியில் உள்ள செயின்ட் மேரி சாலையில் வந்துகொண்டிருந்தார். அப்போது பைக்கில் இருந்து திடீரென புகை வந்துள்ளது. உடனடியாக சுதாரித்த அருண் ராமலிங்கம், பைக்கை விட்டு கீழே இறங்கியுள்ளார். அதற்குள் மழமழவென தீ பரவியதால் நடுரோட்டில் பைக் பற்றி எரிந்தது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத்துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். தீ விபத்திற்கான காரணம் குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
பைக்கில் இருந்து புகை வரத் தொடங்கியதும் உடனடியாக அருண் ராமலிங்கம் சுதாரித்து இறங்கியதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.