'Puliyodhara's answer to the BJP coalition government' - R.P. Udayakumar remained elusive until the end

நேற்று முன்தினம் மதுரை வந்திருந்த மத்திய அமைச்சர் அமித்ஷா பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசனையில்ஈடுபட்டதோடு, பொதுக்கூட்டத்திலும் பேசியிருந்தார். அமித்ஷாவின் உரையில் ''டெல்லியில் அரவிந்த் கெஜரிவால் ஆட்சியோடு சேர்த்து 27 ஆண்டுகளுக்குப் பிறகு டெல்லியில் பா.ஜ.க. ஆட்சி அமைத்திருக்கிறது. 2025 இல் டெல்லியில் எப்படி ஆட்சி அமைத்தோமோ அதேபோல் 2026 இல் தமிழகத்தில் பா.ஜ.க.வின் ஆட்சி கண்டிப்பாக மலரப்போகிறது. குறித்து வைத்துக் கொள்ளுங்கள் 2026 ஆம் ஆண்டில் நடைபெறப்போகும் தேர்தலில் தமிழகம் மற்றும் மேற்கு வங்கத்தில் பா.ஜ.க.வின் கூட்டணி கண்டிப்பாக ஆட்சி அமைக்கும் என்பது உறுதி' எனப் பேசியிருந்தார்.

இந்நிலையில் மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். 'மேடையில் அமித்ஷா பேசுகையில் பாஜக கூட்டணி ஆட்சி அமையும் என்கிறார். அதிமுகவை கேட்டால் எங்கள் தலைமையில் ஆட்சி என்கிறீர்கள். உங்களுக்குள் கிளாரிட்டி இருக்கா?' என கேள்வி எழுப்பினர்.

ஆர்.பி.உதயகுமார் அதற்கு பதிலளிக்காமல், ''திமுக அரசு வீட்டுக்கு போகும். எடப்பாடி பழனிசாமி தலைமையிலான கூட்டணிக்கு மிகப்பெரிய மாபெரும் வெற்றியை தமிழ்நாடு மக்கள் வழங்குவதற்கு தயாராகி விட்டார்கள். எத்தனை குழப்பங்களை ஏற்படுத்தினாலும், எத்தனை எத்தனை திசை திருப்பினாலும் மக்களும் தெளிவாக இருக்கிறார்கள்.பொதுச் செயலாளரும் தெளிவாக இருக்கிறார். நாங்களும் தெளிவாக இருக்கிறோம். நீங்களும் தெளிவாக இருக்கிறீர்கள்.

Advertisment

'Puliyodhara's answer to the BJP coalition government' - R.P. Udayakumar remained elusive until the end

யாருடைய அழுத்தத்தால் தெளிவில்லாதது போல் நீங்கள் கேள்வி கேட்பதும், அந்த கேள்வியை கேட்கச் சொல்லி அழுத்தம் கொடுப்பவர்களும் வேண்டுமானால் தெளிவில்லாமல் இருக்கலாம் ஆனால் மக்கள் தெளிவாக இருக்கிறார்கள். முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமி வர வேண்டும். இப்போது முதல்வராக இருக்கும் மு.க.ஸ்டாலின் வீட்டுக்குப் போக வேண்டும்'' என்றார்.

தொடர்ந்து செய்தியாளர்கள் 'பாஜக கூட்டணி ஆட்சி' என்ற கூற்று தொடர்பாகக் கேள்வி எழுப்பிய நிலையிலும் அதற்கு பதிலளிக்காமல் மழுப்பல் செய்யவே ஆர்.பி.உதயகுமார் முயன்றார்.

Advertisment

இருப்பினும் விடாமல் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய நிலையில், எழுந்து நின்று பேசிய ஆர்.பி.உதயகுமார், 'உங்கள் அனைவருக்கும் வயிறார உணவு பரிமாற புளியோதரை தயார் செய்து வைத்திருக்கிறார். அதை வயிறார உண்டு மனதார வாழ்த்தவேண்டும்' என சொல்லிவிட்டு கையெடுத்து கும்பிட்டு விட்டு அங்கிருந்து கிளம்பினார்.