Skip to main content

தற்கொலை தடுப்பு தினம்... மெழுகுவர்த்தி ஏற்றி உறுதிமொழி!

Published on 10/09/2019 | Edited on 10/09/2019

இன்று செப்டம்பர் 10 ஆம் தேதி உலக தற்கொலை தடுப்பு தினமாக ஐ.நா அறிவித்தது. தற்போது எந்த பிரச்சனையாக இருந்தாலும் சர்வ சாதாரணமாக தற்கொலை செய்வோர்களின் எண்ணிக்கை  அதிகரித்துவிட்டது. வீட்டில் உள்ளவர்கள் பேசினாலும், அறிவுரைகள் சொன்னாலும் கூட தற்கொலை முடிவுகள், காதல் தோல்வி, தேர்வில் தோல்வி, இப்படி பல காரணங்களை முன்வைத்து தற்கொலை முடிவுகளை எடுக்கிறார்கள் இளைஞர்கள். இப்படியான தற்கொலைகளை தடுக்க வேண்டும் என்பதே உலக தற்கொலை தடுப்பு தினத்தின் நோக்கம். இந்த தினத்தை விழிப்புணர்வுடன் மக்களிடம் கொண்டு சேர்த்து கொண்டிருக்கும் நேரத்தில் கூட, பலர் தற்கொலை முடிவுக்கு செல்கின்றனர். 

PUDUKKOTTAI WORLD Prevention Day ... Candle Lighting Confirmation Language


தமிழ்நாட்டிற்கே முன் மாதிரியாக புதுக்கோட்டை மாவட்டத்தில் மாவட்ட மனநல திட்ட அலுவலர் மருத்துவர் கார்த்திக் தெய்வநாயகம் தற்கொலை தடுப்பு தின நிகழ்ச்சிகளை நடத்தினார். புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தொடங்கி மாவட்டம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் காலை 11 மணிக்கு மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவமனை ஊழியர்கள், மருத்துவமனையில் சிகிச்சைக்கு வந்தவர்கள், பொதுமக்கள் இணைந்து தற்கொலை செய்து கொண்டவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாகவும், தற்கொலைகளை தடுக்க விளக்கு ஏற்றும் விதமாகவும், மெழுகுவர்த்தி ஏற்றி தற்கொலைகளை தடுப்போம், விழிப்புணர்வை ஏற்படுத்துவோம் என்று உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். 
 

தற்கொலை எண்ணங்களை தடுக்கவும், தற்கொலை முயற்சி செய்து பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்து, அவர்களை மீண்டும் இந்த முயற்சியில் இருந்து தடுத்து மாற்றுப் பாதைக்கு அழைத்துச் செல்லவும், கடந்த மாதம் 104 என்ற இலவச ஆலோசனை சேவையை தொடங்கி வைத்துள்ளார் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர். இதன் மூலம் இப்படியான எண்ணம் உள்ளவர்கள் இலவச அழைப்பில் அழைத்துப் பேசினால் அவர்களுக்கு தேவையான அறிவுரைகள் வழங்கப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறார்கள். 

PUDUKKOTTAI WORLD Prevention Day ... Candle Lighting Confirmation Language


அதே போல மனநல வியாழன் திட்டம் தொடங்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. அடுத்த கட்டமாக கிராமங்கள் தோறும் சமூக அக்கரை கொண்ட இளைஞர்களை குழுவாக அமைத்து, அவர்கள் மூலம் கிராம மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் முயற்சியும் நடந்து வருகிறது. தோல்விகளை கண்டு தவறான முடிவுகளுக்கு போகாமல் இருந்தாலே தற்கொலைகள் தடுக்கப்படும்.


 

சார்ந்த செய்திகள்

Next Story

பிரான்ஸ் வீரர்களுக்கு தற்காப்புக்கலைகளை கற்றுக்கொடுக்கும் தமிழக வீரர்கள்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Tamil Nadu players teaching martial arts to French players

மாமல்லபுரத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் சர்வதேச மஞ்சூரியா குங்ஃபூ தற்காப்புக் கலையின் சார்பில் இந்தோ பிரான்ஸ் தற்காப்புக் கலை சிறப்பு பயிற்சி முகாம் பிரான்ஸில் நடைபெற்று வருகிறது.

பிரான்ஸ் நாட்டின் ஃபெவ்ரி நகரில் மாஸ்டர் ஷி ஷிஃபூ மேத்யூ  தலைமையில் ஏப்ரல் 22 துவங்கி 28 வரை 7 நாட்கள் நடைபெற்று வரும் இந்தச் சிறப்பு பயிற்சி முகாமில் கல்பாக்கம் அணுபுரத்தைச் சேர்ந்த மாஸ்டர் சந்தோஷ், திண்டுக்கல் மாவட்டம் பழனி நாகூரைச் சேர்ந்த யோகா மாஸ்டர் பிரகாஷ் ஆகிய இருவரும், பிரான்ஸ் நாட்டு வீரர்களுக்கு  குங்ஃபூ தற்காப்புக் கலை, தெக்கன் களரி சிலம்பக்கலை, பதஞ்சலி ஹத யோகா, ஆகியவற்றை கற்பித்து வருகின்றார்கள். நேற்று யோகா குறித்து விளக்கம் அளித்து அதை செய்தும் காண்பித்துள்ளார்கள்.

Next Story

அரசு மருத்துவமனையில் வீசும் துர்நாற்றம்; நோயாளிகள் குற்றச்சாட்டு

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Bad smell wafting from Vaniyambadi Government Hospital

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பெருமாள்பேட்டை பகுதியைச்  சேர்ந்தவர் சத்யா (30). கர்ப்பிணியான சத்யாவின் கரு கலைந்துள்ளது. இதனால் கடந்த வெள்ளிகிழமை அன்று மிகுந்த வயிற்று வலி ஏற்பட்டு உடல் நிலை சரியில்லாமல் சிகிச்சைக்காக வாணியம்பாடி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் கருக்கலைப்பு ஏற்பட்டுள்ளதாகவும்  மேலும் மருத்துவமனையில்  சேர்ந்து வயிற்றை முழுவதுமாக சுத்தம் செய்ய வேண்டும் என கூறியுள்ளார்கள்.

இதனைத் தொடர்ந்து, கடந்த வெள்ளிக்கிழமை சிகிச்சைக்காக உள்நோயாளியாக சேர்க்கப்பட்டுள்ளார்.அதே வார்டில் சுமார் 7 நோயாளிகள் உள் நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் தினமும் காலையில் ஒரு ஊசியும் மாலையில் ஒரு ஊசியும் செலுத்தி விட்டு மாத்திரைகள் கொடுத்துவிட்டு செல்வதாகவும் நேற்று வரை வயிற்றை சுத்தம் செய்து உரிய சிகிச்சை அளிக்க எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.

அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனை வார்டில் கட்டில்கள் மேலிருக்கும் போர்வைகள் சரியாக சுத்தம்  செய்யப்படாமல் ரத்தக் கரையுடன் இருப்பதாகவும் தங்கியுள்ள அறையின் கழிவறையிலிருந்து அதிகப்படியான துர்நாற்றம் வீசுவதால்,  அறையில் உள்ள அனைவரும்  துர்நாற்றம் தாங்க முடியாமல் இரவு நேரத்தில் மருத்துவமனை வளாகத்தில் அமர்ந்து உணவு உண்பதும்  உறங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம் தலையிட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நோயாளிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.