Skip to main content

பள்ளி மாணவன் மாயம்... தேடும் பணியில் காவல்துறை!

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகில் உள்ள பாத்தம்பட்டி ரெங்கசமுத்திரம் பகுதியை சேர்ந்த குழந்தைசாமி மகன் ஹெவின் ஆரோ (வயது 15). இவர் கே.ராசியமங்கலம் கிராமத்தில் உள்ள தனியார் பள்ளியில் 10- ம் வகுப்பு படித்து வருகிறார். அதே பள்ளியில் அந்த மாணவனின் தாயாரும் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.

10- ம் வகுப்புகளுக்கு சிறப்பு வகுப்புகள் நடப்பதால், மாணவன் ஹெவின் ஆரோ வழக்கமாக காலை 07.00 மணிக்கு வீட்டிலிருந்து புறப்பட்டு 3 ம் நம்பர் டவுன் பஸ் மூலம் ஆலங்குடி சென்று, அங்கிருந்து பள்ளிக்கு செல்வது வழக்கம். சில நேரங்களில் பஸ் வர தாமதம் ஏற்பட்டால் அந்த வழியாக மோட்டார்  சைக்கிளில் செல்வோரிடம் லிப்ட் கேட்டு செல்வதும் மாணவனின் வழக்கமாக இருந்துள்ளது.

pudukkottai district school student missing police investigate


இன்று காலை 07.00 மணிக்கு பள்ளிக்கு செல்ல வீட்டிலிருந்து புறப்பட்டுச் சென்ற மாணவன் பள்ளிக்குச் செல்லவில்லை. மாணவன் ஹெவின் ஆரோ பள்ளிக்கு வரவில்லை என்று வகுப்பாசிரியர் மாணவனின் தாயாரான ஆசிரியைக்கு தகவல் கொடுத்துள்ளார். அதன் பிறகு ஆலங்குடி காவல் நிலையத்திலும் புகார் கொடுத்துள்ளனர். அதை தொடர்ந்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, ஆலங்குடி, புதுக்கோட்டை உள்ளிட்ட பல இடங்களில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து மாணவனை தேடி வருகின்றனர். 

பள்ளிக்குச் சென்ற மாணவன் காணாமல் போய் இருப்பது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பள்ளியிலோ, வீட்டிலோ ஏதேனும் பிரச்சனையால் மாணவன் மாயமானாரா அல்லது லிப்ட் கேட்டு ஏறிச் சென்ற போது யாரேனும் மாணவனை கடத்தியுள்ளனரா என்ற கோணத்தில் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை செய்து மாணவனை தேடி வருகின்றனர்.

 

இதை படிக்காம போயிடாதீங்க !