Public complaint; 4,800 for eradication of adulterated liquor

Advertisment

கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலை பகுதியில் 4,800 லிட்டர் கள்ளச்சாராயம் ஊறல் போலீசாரால்அழிக்கப்பட்டது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலைப்பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சப்படுவதாக பொதுமக்கள் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. இதுதொடர்பாக மூன்றுதனிப்படைகள்அமைக்கப்பட்டு காவல்துறையினர் தீவிர சோதனையில்ஈடுபட்டு வந்தனர். அப்பொழுது மலைப் பகுதியில் நிகழ்ந்தபட்ட சோதனையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கள்ளச்சாராய ஊறல்களை பறிமுதல் செய்த தனிப்படை போலீசார் சுமார் 4,800 லிட்டர் கள்ளச்சாராயஊறல் போட்டிருந்த கலன்களைகீழே கொட்டி அழித்தனர். கள்ளச்சாராயஊறல் போட்ட நபர்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.