கர்நாடக அரசு, மேகதாது என்ற இடத்தில் காவிரியின் குறுக்கே அணைகட்ட முயன்று வருகிறது. இதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இது குறித்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.
இந்நிலையில் கர்நாடக அரசை கண்டித்து ஆளும் கட்சியினரே இது வரை எந்த போராட்டமும் நடத்தாத நிலையில், திருச்சியில் உள்ள திருச்சி அதிமுக நிர்வாகி மலைக்கோட்டை பகுதி பொருளாளர் வணக்கம் சோமு என்பவர் தலைமையில் தீடிர் என திருச்சியில் இருந்து அக்கட்சியினர் 110 பேர் கர்நாடகம் அணை கட்ட முடிவு செய்துள்ள மேகதாது என்ற இடத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அங்கே கர்நாடக அரசுக்கு எதிராக கண்டன முழக்கம் எழுப்பி போராட்டம் நடத்தினர். இது அப்பகுதியில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.