'Promotion to IPS Officers' - Tamil Nadu Govt

தமிழக ஐ.பி.எஸ். அதிகாரிகள் 19 பேருக்கு பதவி உயர்வு அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து தமிழக உள்துறை செயலாளர் அமுதா வெளியிட்டுள்ள உத்தரவில், “ஐபிஎஸ் அதிகாரிகளான பி.ஆர். வெண்மதி, பி. அரவிந்தன், வி. விக்ரமன், சரோஜ்குமார் தாகூர், டி. மகேஷ்குமார், என். தேவராணி, இ.எஸ். உமா,ஆர். திருநாவுக்கரசு, ஆர். ஜெயந்தி, ஜி. ராமர் உள்ளிட்ட 10 பேருக்கும் டிஐஜியாக பதவி உயர்வு அளிக்கப்படுகிறது.

அதே போன்று ஐபிஎஸ் அதிகாரிகளான ஆனந்த்குமார் சோமானி, ஆர். தமிழ்ச்சந்திரன் ஆகியோருக்கு ஏ.டி.ஜி.பி.யாக பதவி உயர்வு அளிக்கப்படுகிறது. மேலும் ஜெயஸ்ரீ, சாமுண்டீஸ்வரி, லட்சுமி, ராஜேஸ்வரி, ராஜேந்திரன், முத்துசாமி, மயில்வாகனன் ஆகிய ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு ஐ.ஜி. யாக பதவி உயர்வு வழங்கப்படுகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.