
கடந்த சென்னைஏழுகிணறுபகுதியில் வள்ளலார் வசித்தஇல்லத்திற்குச்சென்ற அமைச்சர் சேகர்பாபு ஆய்வுக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்பொழுது பேசிய அமைச்சர் சேகர்பாபு,''கோவில்களில் காணிக்கையாகவழங்கப்பட்டுப்பயன்படுத்தப்படாமல் இருக்கும் நகைகள் உருக்கும் பணி வெளிப்படையாக நடைபெறும். ஆகவே இதில் எந்த தவறும் நிகழாது.இறைவனுக்குத் தந்த அந்த பொருட்களை இறைவனுக்கேபயன்படுத்துவதுதான்இந்த திட்டம். மீண்டும் மீண்டும்வற்புறுத்திச்சொல்லக்கடமைப்பட்டிருக்கிறேன். இதில் இம்மியளவு கூட தவறுநடைபெறுவதற்குத்தமிழ்நாடு முதல்வரும், இந்து சமய அறநிலையத் துறையும் அனுமதிக்காது. ஐயப்பன் மீது சாட்சியாக, ஐயப்பன் மீதுசத்தியமிட்டுச்சொல்லுகிறோம் ஒரு சிறு தவறு கூட இந்த நகைகளை உருக்குகின்ற பணியில் நிகழாது... நிகழாது...'' என்றார்.
இந்நிலையில் தமிழகத்தில் உள்ள கோவில் நகைகளை உருக்குவதற்குத் தடைகேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு விரைவில் விசாரணைக்குவரவிருக்கிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)