Skip to main content

“இந்த பிரச்சனை, அம்மி கல்லை நகர்த்தவே முடியாது போன்று இருந்தது” - தயாநிதி மாறன் எம்.பி.!

Published on 14/07/2021 | Edited on 14/07/2021

 

"This problem was immovcable like the stone" - MP Dayanidhi Maran

 

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி ஆயிரம்விளக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நுங்கம்பாக்கம் பகுதியில் சீரமைக்கப்பட்டுள்ள சொக்கட்டான் சாலையின் திறப்பு விழா நடைபெற்றது. இந்த நிகழ்வில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு,  மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், சென்னை மேற்கு மாவட்டப் பொறுப்பாளர் நே. சிற்றரசு, சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் நா. எழிலன், ஜெ.எஸ்.  அகஸ்டின் பாபு ஆகியோர் பங்கேற்றனர்.

 

அப்போது செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய எம்.பி. தாயநிதி மாறன் பேசியதாவது, “தமிழக முதல்வர், அண்ணா கூறியது போல ‘மக்களிடம் செல், மக்களிடம் பணியாற்று, அவர்களின் குறைகளைத் தீர்க்க வேண்டும்’ என்று எங்களுக்கு உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவின் அடிப்படையில் நாங்கள் இருவரும் அமைச்சர் சேகர்பாபுவிடம் ஒரு கோரிக்கையை முன்வைத்தோம். பல ஆண்டுகாலமாக இந்த சொக்கட்டான் சாலையில் சாலை வசதி சீராக இல்லாமல் மக்கள் கடும் அவதிகளை எதிர்கொண்டு வந்தனர். ஒவ்வொரு முறையும் சட்டமன்றங்களில் எடுத்துக் கூறினாலும் அதற்கு தடங்கலைப் போட்டுவந்தனர். அதனால் இந்தப் பகுதி மக்களுக்கு ஒரு விடியல் இல்லாமல் இருந்தது.

 

"This problem was immovcable like the stone" - MP Dayanidhi Maran

 

இந்த இடம் கோவிலுக்கு சொந்தமான இடம் என்பதால் அமைச்சர் பி.கே. சேகர்பாபுவிடன் கொண்டு சென்ற உடனே இங்கு சாலை போடுவதற்காக அவர் அனைத்து ஏற்பாடுகளையும் உடனடியாக செய்துகொடுத்தார். இந்தப் பிரச்சனை, அம்மி கல்லை நகர்த்தவே முடியாது போன்று இருந்தது. ஆனால் அதையும் நாங்கள் இணைந்து முடித்திருப்பது மிகவும் பெருமையாக உள்ளது. அதேபோல் சென்னையில் பல்வேறு இடங்களில் சாலைகள் சீராக இல்லாமல் இருக்கிறது. அதற்கும் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறினார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வேட்புமனு தாக்கல் செய்த தயாநிதி மாறன் (படங்கள்)

Published on 27/03/2024 | Edited on 27/03/2024

 

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

மார்ச் 20 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கிய நிலையில், 27 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்யக் கடைசி நாள் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இன்று கடைசி நாளாகும். தமிழ்நாட்டின் 39 தொகுதிகள் உட்பட 102 தொகுதிகளுக்கான வேட்புமனு தாக்கல் இன்று நிறைவு பெறுகிறது. நாளை வேட்புமனு பரிசீலனை நடைபெறுகிறது. இன்று கடைசி நாள் என்பதால் ஸ்டார் வேட்பாளர்கள் தங்களது வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்து வருகின்றனர். இந்நிலையில், திமுக சார்பில் மத்திய சென்னையில் போட்டியிடும் தயாநிதி மாறன் இன்று மனுத்தாக்கல் செய்தார். செனாய் நகரில் உள்ள மண்டல அலுவலகம் 8ல் வேட்புமனு தாக்கல் செய்தார். இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, சிற்றரசு வெற்றியழகன், அண்ணா நகர் சட்டமன்ற உறுப்பினர் மோகன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Next Story

'ஆறுதலுக்கு வராத பிரதமர், ஆதாயத்திற்கு மட்டும் வருகிறார்' - அமைச்சர் சேகர்பாபு

Published on 16/03/2024 | Edited on 16/03/2024
Why is the prime minister coming six times this year alone?'-Minister Shekharbabu

'மக்கள் துயரத்தில் இருக்கும் பொழுது ஆறுதல் சொல்ல வக்கில்லாத பிரதமர், இந்த ஆண்டு மட்டும் ஆறு முறை தமிழகத்திற்கு வந்திருக்கிறார்' என அமைச்சர் சேகர்பாபு விமர்சித்துள்ளார்.

சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, ''இன்று ஒரு சில தலைவர்கள் மூன்று நான்கு ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்திற்கு வந்துவிட்டு, ஏதோ தமிழ்நாட்டில் தொடர்ந்து பாட்டன், முப்பாட்டன் காலத்திலிருந்து தமிழக மக்களுக்கு உழைத்தது போலவும், தமிழக மக்களுக்கு நன்மை செய்தது போலவும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அமைச்சர்கள் என்பதால் சற்று அடக்கி வாசித்துக் கொண்டிருக்கிறோம். எங்களைப் பொறுத்தவரை கொள்கை என்பது அண்ணா சொன்னது போல இடுப்பில் கட்டிய வேட்டி தான். பதவி என்பது தோளில் போட்டுக் கொண்ட துண்டு தான்.

இயக்கத்திற்காகவும், இயக்கத்தின் தலைவருக்காகவும் எதை வேண்டுமானாலும் இழப்பதற்கு தயாராக இருக்கின்ற இயக்கம் தான் திராவிட முன்னேற்றக் கழகம் என்பதை இந்த மேடையில் நான் அழுத்தம் திருத்தமாக சொல்லிக் கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன். மக்களுடைய துயரம் களைவதற்கு, துன்பப்படுகின்ற மக்களுக்கு ஆறுதல் சொல்வதற்கு தமிழகத்திற்கு வருவதற்கு வக்கில்லாத பாரத பிரதமர், அரசியல் ஆதாயத்திற்காக இந்த ஆண்டு மட்டும் ஆறு முறை வந்திருக்கிறார். இன்னும் இரண்டு முறை இந்த மாதம் 20ஆம் தேதிக்குள் வருவதாக இருக்கிறார்.

நான் பாஜகவினருக்கும், அவர்களைச் சார்ந்தவர்களுக்கும் சொல்வது என்னவென்றால் உங்களுடைய பாரத பிரதமர் தண்ணீருக்கு கீழ் தவம் இருந்தாலும் சரி, தரையின் மீது தவம் இருந்தாலும் சரி, அல்லது ஓடுகின்ற வாகனத்தின் மீது அமர்ந்து தவம் இருந்தாலும் சரி, பறக்கும் விமானத்தின் மீது அமர்ந்து தவம் இருந்தாலும் சரி தமிழகம், பாண்டிச்சேரி உட்பட 40 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி தான் வெற்றி பெறும். அந்த வெற்றியை தமிழக முதல்வருக்கு பிறந்தநாள் பரிசாக சமர்ப்பிப்போம்'' என்றார்.