சமூக வலைத்தளமான முகநூல் பக்கத்தில் பெண் குரலில் பேசி சுமார் 200 பேரிடம் ஆண் ஒருவர் பணம் பறித்தது தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது.
சென்னை அண்ணாநகரில் உள்ள மேற்கு மண்டல சைபர் கிரைம் போலீசில் நிகழ்ச்சி ஏற்பாடுளராக பணியாற்றி வரும் இளம்பெண் ஒருவர் புகார் ஒன்றை அளித்திருந்தார். அந்த புகாரில் தன்னுடைய புகைப்படங்களை சமூக வலைத்தளமான முகநூல் பக்கத்தில் ப்ரியா என பயன்படுத்தி தவறான முறையில் சித்தரித்து குறிப்பிட்ட என்னுடன் ஆடியோ காலில் பேச 800 ரூபாய், வீடியோ காலிலில் பார்க்க 3000 ரூபாய், நேரில் சந்திக்க வேண்டும் என்றால் 8000 ரூபாய் என்று விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது என தெரிவித்திருந்தார்.
உடனடியாக குறிப்பிட்ட முகநூல் பக்கத்திற்குச் சென்ற போலீசார், சாதுரியமாக பேசி கூகுள் பேய் நம்பரை பெற்றுள்ளனர். பின்னர் அந்த எண்ணை வைத்து யார் அந்த நபர் என விசாரணை செய்ததில் புதுச்சேரியில் உள்ள நகைக்கடை ஒன்றில் வேலை செய்து வைத்த கிருஷ்ணன் என்பது தெரியவந்தது. கிருஷ்ணனை கைது செய்த போலீசார் விசாரணை செய்ததில் வாய்ஸ் சேஞ்சர் செயலி மூலம் பல ஆண்கள் இடம் பேசி பணம் வாங்கியதை போலீசார் கண்டறிந்தனர்.
மேலும் பணத்தை பெற்றுக் கொண்டவுடன் சம்பந்தப்பட்டவர்களின் செல்போன் நம்பரை பிளாக் செய்து விடுவதையும், இதில் ஏமாந்தவர்கள் இது வெளியே தெரிந்தால் அவமானம் என்பதால் வெளியே சொல்ல மாட்டார்கள் என்ற நம்பிக்கையில் இந்த தவறை செய்ததாக கிருஷ்ணன் ஒப்புக் கொண்டுள்ளார். சுமார் இதுவரை இரண்டு லட்சம் ரூபாய்க்கு மேல் இவ்வாறு பணம் வசூலித்து அதனை உல்லாசமாக செலவு செய்ததாகவும் விசாரணையில் கிருஷ்ணன் தெரிவித்துள்ளார். கைது செய்யப்பட்ட கிருஷ்ணனை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி தற்போது சிறையில் அடைத்துள்ளனர்.
பெண்கள் பெயரில் போலியான இன்ஸ்டாகிராம் மற்றும் முகநூல் பக்கங்களில் ஆபாசமான பதிவுகள் இட்டு இதுபோன்ற மோசடிகள் அதிகமாக நடைபெறுவதால் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என போலீசார் எச்சரித்துள்ளனர்.