Skip to main content

பிரியா மரணம்; “உண்மையை உலகறிய அறிவிப்போம்” - அமைச்சர் மா. சுப்ரமணியன் 

Published on 16/11/2022 | Edited on 16/11/2022

 

 Priya issue ; "We will announce the truth to the world" Minister M. Subramanian

 

பிரியா மரணம் தொடர்பாக நடந்தது மருத்துவர்களின் கவனக்குறைவுதான் என்பதை அரசு நேரடியாகவே ஒப்புக்கொண்டது என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் கூறியுள்ளார்.

 

சென்னை கோட்டூர்புரத்தில் நீர் வழித்தடங்களின் அருகாமையில் வசிக்கும் மக்களுக்கு அமைச்சர் மா.சுப்ரமணியன் நிவாரண உதவிகளை வழங்கினார். பின்னர் அமைச்சர் மா. சுப்ரமணியன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

 

அப்போது பேசிய அவர், “பிரியா மரணம் தொடர்பான இறுதி விசாரணை அறிக்கை ஓரிரு நாளில் கிடைக்கும்.  நேற்றைக்கு நடந்ததைக் கவனக் குறைவு என்பதை நேரடியாகவே ஒப்புக்கொண்டது இந்த அரசு. அதற்கான தீர்வு என்கிற வகையில் மருத்துவர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 

 

இதற்கு மேலும் நடவடிக்கைகள் துறை ரீதியாகவும் சட்ட ரீதியாகவும் எடுக்கப்படும் என்றும் சொல்லி இருக்கிறோம். அவர்களைப் போல் நாங்கள் தப்பித்தெல்லாம் செல்லமாட்டோம். உண்மை என்னவோ அதை உலகறிய அறிவிப்போம். மருத்துவத்துறை குறைகள் இல்லாமல் இருக்க வேண்டும் என்பதையும் மருத்துவர்களுக்கு அறிவித்துள்ளோம்” எனக் கூறினார்.

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

'இதையெல்லாம் வைத்து பணம் சம்பாரிக்கணுமா?' - மறுத்த அமைச்சர் மா.சு  

Published on 11/03/2024 | Edited on 11/03/2024
'It doesn't seem like a good idea to monetize it' - Minister Ma.su interview

கேரளாவில் அரசு மருத்துவமனைகளில், பிணவறையில் கேட்பாரற்றுக் கிடந்த சடலங்களை விற்றதன் மூலம் கேரள அரசு 3 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

கேரள மாநிலத்தில் அரசு மருத்துவமனைகளின் பிணவறைகளில் கேட்பாரற்று கிடந்த சடலங்களை 2008 ஆம் ஆண்டு முதல் கேரளா அரசு விற்பனை செய்துள்ளது. மொத்தமாக 1,122 சடலங்களை தனியார் கல்லூரிகளுக்கு கேரள அரசு வழங்கியுள்ளது. மருத்துவ மாணவர்களுக்கு நேரடி பயிற்சி அளிக்க மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு மாதிரிகளாக வழங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. எர்ணாகுளம் அரசு மருத்துவமனையில் மட்டும் அதிகபட்சமாக கடந்த 11 ஆண்டுகளில் கேட்பாரற்ற 599 சடலங்களை மருத்துவக் கல்லூரிகளுக்கு கேரள அரசு வழங்கியுள்ளது.

பதப்படுத்தி வைக்கப்பட்ட சடலம் ஒன்றுக்கு 40,000 ரூபாயும், பதப்படுத்தப்படாத சடலம் ஒன்றுக்கு 20,000 ரூபாயும் என கேரள அரசு வசூலித்துள்ளது. இதில் மொத்தமாக  3.66 கோடி ரூபாய் கேரள அரசு வருவாய் ஈட்டியுள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது.

'It doesn't seem like a good idea to monetize it' - Minister Ma.su interview

இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனிடம் செய்தியாளர்கள் கேரளா அரசு சடலங்களை விற்று வருவாய் ஈட்டியது குறித்து கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த அவர், 'அடையாளம் தெரியாத சடலங்கள் குறிப்பிட்ட காலம் வரை மருத்துவக் கல்லூரி உடற்கூறு ஆய்வுக்கு பயன்படுத்துவது என்பது எல்லா இடத்திலும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற ஒன்று. அதிலும் கூட பணம் செய்ய வேண்டும் என்பதுதான் ஒரு கேள்விக்குறி. தமிழ்நாடு அரசு கொஞ்சம் யோசித்து தான் முடிவு எடுக்கும். அது தேவையா என்பது தான். அது நல்லது என்று சொல்ல முடியாது. அதை போய் உடற்கூறாய்வுக்கு விற்பது என்பதை ஏற்கவில்லை. இலவசமாக தரலாம் ஆனால் அதை பணமாக்க வேண்டும் என்பது நல்ல கருத்தாக தெரியவில்லை'' என்றார்.

Next Story

‘கேலோ இந்தியா’ விளையாட்டுப் போட்டி; சாதனை படைத்த அண்ணாமலை பல்கலைக்கழக அணி 

Published on 01/03/2024 | Edited on 01/03/2024
Annamalai University's record-setting team at khelo India Games

பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான கேலோ - இந்தியா விளையாட்டுப் போட்டிகளில் அண்ணாமலைப் பல்கலைக்கழக கால்பந்து அணி 2வது முறையாக வெற்றிபெற்றுள்ளது.

அசாம் மாநிலம் கவுஹாத்தில் தேசிய அளவில் செயல்பட்டு வரும் பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான கேலோ-இந்தியா விளையாட்டுப் போட்டிகள், கடந்த பிப்ரவரி 19 முதல் 29 வரை நடைபெற்றது. இதில் 700க்கும் மேற்பட்ட  இந்திய பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான விளையாட்டுப் போட்டிகளில் தேர்வு செய்யப்பட்ட 8 பல்கலைக்கழக அணிகள் பங்கேற்றனர். அந்த வகையில், அண்ணாமலைப் பல்கலைக்கழக கால்பந்து பெண்கள் அணி, கால்பந்து போட்டிகளில் பங்கேற்று விளையாடியது.

இந்த கால்பந்து லீக் போட்டிகளில் வெற்றி பெற்ற அண்ணாமலை பல்கலைக்கழக அணி அரை இறுதிக்கு முன்னேறியது. அதில், அரையிறுதி போட்டியில் சென்னை பல்கலைக்கழக அணியை, அண்ணாமலைப் பல்கலைக்கழக அணி (2-0) என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இதனையடுத்து. இறுதிப் போட்டியில் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள குருநானக் தேவ்பல்கலைக்கழகம் அணியை (3-2) என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றது. கேலோ-இந்தியா போட்டிகளில் அண்ணாமலைப் பல்கலைக்கழக அணி இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தை பெற்று வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

Annamalai University's record-setting team at khelo India Games

வெற்றி பெற்ற கால்பந்து அணி வீராங்கனைகள் இன்று (01-03-24) மதியம் ரயில் மூலம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திற்கு  திரும்பினார்கள். அப்போது, சிதம்பரம் ரயில் நிலையத்திற்கு வந்த வீராங்கனைகளை, அண்ணாமலைப் பல்கலைக்கழக துணைவேந்தர் ஆர்.எம். கதிரேசன் அனைவருக்கும் மாலை அணிவித்து மேளதாளங்களுடன் வாழ்த்தி வரவேற்றார்.

இந்நிகழ்வில் உடற்கல்வித் துறை இயக்குநர் ராஜசேகரன், பொறியியல் புல முதன்மையர் கார்த்திகேயன், கல்வியியல் புல முதன்மையர் குலசேகர பெருமாள், பல்கலைக்கழக பேராசிரியர்கள் மற்றும் துணைப் பேராசிரியர்கள், உதவிப் பேராசிரியர்கள், துணைவேந்தரின் நேர்முகச் செயலர், மக்கள் தொடர்பு அதிகாரி மற்றும் ஊழியர்கள் மற்றும் 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.