nn

தமிழகத்தில் அவ்வபோது ஐபிஎஸ் மற்றும் ஐஏஎஸ் அதிகாரிகள் நிர்வாக காரணத்திற்காகபணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். அண்மையில் தமிழக அமைச்சரவை மாற்றப்பட்டிருக்கும் நிலையில் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தமிழகத்தில் 13 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

Advertisment

குறிப்பாக தமிழக துணை முதலமைச்சர் உதயநிதியின் தனிச்செயலாளராக பிரதீப் யாதவ் ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் உயர்கல்வித்துறை செயலாளராக இருந்த நிலையில் தற்பொழுது துணை முதல்வரின் தனிச்செயலாளராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல் தலைமை தேர்தல் அதிகாரியான சத்யபிரதா சாஹூவிற்கு கூடுதல் பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளது. கால்நடை, பால்வளம், மீன்வளத்துறை செயலர் பணியையும் கூடுதலாக சத்யபிரதா சாஹூ கவனிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

உயர்கல்வித்துறை செயலாளராக கோபாலகிருஷ்ணன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை ஆணையராக ராஜேஷ் லக்கானி நியமனம் செய்யப்பட்டுள்ளார். மின்வாரியத்துறை புதிய தலைவர் நந்தகுமார் ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். கைத்தறி துறை செயலாளராக அமுதவள்ளி நியமனம் செய்யப்பட்டுள்ளார். கல்லூரி கல்வி இயக்குநராக சுந்தரவள்ளி நியமனம் செய்யப்பட்டுள்ளார். இப்படியாக மொத்தம் 13 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.