Skip to main content

ரெம்டெசிவிர் மருந்து; தனியார் மருத்துவமனைகளின் நூதன மோசடி....

Published on 17/05/2021 | Edited on 17/05/2021
Private hospitals charge 34 thousand rupees for Remtisiver medicine

 

ரெம்டெசிவர் மருந்து மத்திய அரசிடமிருந்து பெறப்பட்ட நிலையில், நாளொன்றுக்கு 300 பேருக்கு மட்டுமே ஒவ்வொரு மாவட்டத்திலும் மருந்துகள் வழங்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், அரசு மருத்துவமனைகள் மருந்துகளை நோயாளிகளுக்குப் பயன்படுத்தினாலும் தனியார் மருத்துவமனைகள் அதிக அளவில் இந்த ரெம்டெசிவர் மருந்தை வாங்கித்தர வற்புறுத்தி வருகின்றனர்.

 

அதிலும், தனியார் மருத்துவமனைகள் தங்களுடைய மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரக்கூடிய நோயாளிகளின் முழு விவரங்களையும் சேகரித்து, தங்களுடைய மருத்துவமனை ஊழியர்களைக் கொண்டு தினந்தோறும் அரசு விற்பனை செய்யும் இடத்தில் நோயாளிகள் உறவினர்களைப் போல வரிசையில் நின்று கொண்டு சிலர் மருந்துகளை வாங்கி சேகரித்து வைத்துக்கொள்ளும் பணியை தற்போது தொடர்ந்து செய்து வருகின்றனர்.

 

ஆனால், நோயாளிகளுக்கு இந்த மருந்து தேவைப்படும் போது நோயாளிகளின் உறவினர்களிடம் மருந்தை நீங்களே வெளியில் வாங்கித் தாருங்கள் என்று கூறுகின்றனர். பின்னர் அவர்களை ஒரு நாள் முழுவதும் அலைக்கழித்துக் கிடைக்கவில்லை என்றால் நாங்களே அந்த மருந்தைப் போடுகிறோம் என்று கூறி 2 டோஸ் மருந்துகளைத் தனியார் மருத்துவமனைகளில் நோயாளிகளுக்குப் போட்டுவிட்டு அவர்களிடமிருந்து 34 ஆயிரம் ரூபாய் மருந்திற்காக மட்டும் வசூலிக்கின்றனர்.

 

இந்த மருந்து வெளியே கள்ளச் சந்தைகள் எல்லாம் தற்போது விற்பனை செய்யப்படுவதில்லை தனியார் மருத்துவமனைகளை தங்களுடைய ஊழியர்களைக் கொண்டு நோயாளிகளின் மொத்த தகவல்களையும் அரசிடம் காட்டி மருந்துகளை மொத்தமாக வாங்கிச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே மருந்துகளை வாங்க வரும் ஒவ்வொருவரையும் உரிய நோயாளிகளுக்கான ஆவணங்களையும் அவர்கள்தானா, உண்மையான உறவினர்களா என்பதையும் ஆய்வு செய்து மருந்துகளைக் கொடுக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மருத்துவமனை காவலாளியைத் தாக்கிய ஆட்டோ ஓட்டுநர்கள்; காவல்துறையினர் விசாரணை

Published on 17/07/2023 | Edited on 17/07/2023

 

Auto drivers hit hospital guard; Police investigation

 

வேலூர் மாநகரின் மையப் பகுதியில் செயல்பட்டு வருகிறது பிரபல தனியார் மருத்துவமனையான சிஎம்சி மருத்துவமனை. இங்கு நாள்தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட உள் மற்றும் புற நோயாளிகள் வந்து செல்கின்றனர். இம்மருத்துவமனையில் இருந்து வாகனங்கள் வெளியேறும் முக்கிய வாயில் காகிதப் பட்டறை ஆற்காடு சாலையில் அமைந்துள்ளது.

 

இந்நிலையில் நேற்றைக்கு முன்தினம் மருத்துவமனை வளாகத்திலிருந்து வெளியேறிய பேருந்து மற்றும் மருத்துவரின் காருக்கு ஆற்காடு சாலையில் நிறுத்தி இருந்த ஆட்டோ ஓட்டுநர்கள் வழிவிடவில்லை எனக் கூறப்படுகிறது. இதனை சிஎம்சி மருத்துவமனை காவலாளி ஆட்டோ ஓட்டுநர்களிடம் சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டு ஆட்டோவை அப்புறப்படுத்தும்படி கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டு மருத்துவமனை காவலாளியைச் சரமாரியாகத் தாக்கியுள்ளார். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது. இதையடுத்து இது தொடர்பாக வேலூர் வடக்கு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

 

Next Story

மாடியிலிருந்து விழுந்த செவிலியர் உயிரிழப்பு; பேச்சுவார்த்தை நடத்திய ஆணையர்

Published on 08/03/2023 | Edited on 08/03/2023

 

trichy hospital nurse incident road blocked by parents and relatives

 

திருச்சி மாவட்டம் சோமரசம்பேட்டை அல்லித்துறை அடுத்த சாந்தாபுரம் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி கருப்பசாமியின் மகள் நிவேதா. இவர் நர்சிங் படித்து முடித்துவிட்டு திருச்சி வயலூர் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் செவிலியராக பணியாற்றி வருகிறார். இந்த மருத்துவமனையில் குழந்தை இல்லாத தம்பதியருக்கு சோதனைக் குழாய் மூலம் குழந்தைகள் பெறுவதற்கான சிறப்பு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

 

இந்நிலையில் மருத்துவமனையில் பணிபுரிந்து வரும் நிவேதா என்ற 19 வயது பெண் நேற்று பிற்பகல் 3:30 மணி அளவில் 5வது மாடியிலிருந்து கீழே விழுந்து பலத்த காயம் அடைந்து அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த பெற்றோர் சம்பவம் நடந்த மருத்துவமனைக்கு வந்தனர். மருத்துவமனை நிர்வாகத்திடம் பெண்ணின் இறப்பு பற்றி பெற்றோர் கேட்டபோது, மருத்துவமனை நிர்வாகமோ சரியான பதில் அளிக்கவில்லை. இதனால் மனம் உடைந்த பெற்றோர், உறவினர் மற்றும் ஊர் மக்கள் மருத்துவமனையை இரவு 8:30 மணி அளவில் மருத்துவமனையை முற்றுகையிட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். பணிக்கு சேர்ந்த ஒரு மாதத்திலேயே எப்படி இறந்தார். இறப்புக்கான காரணம் தெரிய வேண்டும். எங்கள் மகள் தற்கொலை செய்து கொள்ள மாட்டாள். அவளுடைய சாவில் மர்மம் உள்ளது. மருத்துவமனை நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெற்றோர்  மற்றும் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் அந்த பகுதியில் போக்குவரத்து  பாதிக்கப்பட்டது.

 

சாலை மறியலில் ஈடுபட்டவர்களை அப்புறப்படுத்துவதற்காக விரைந்து வந்த சட்டம் ஒழுங்கு துணை ஆணையர் அன்பு மற்றும் உதவி ஆணையர் ராஜு, சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி நீண்ட நேரத்திற்கு பிறகு இரவு 10:15 மணிக்கு கூட்டத்தை அப்புறப்படுத்தினார்கள். காவல்துறையினர் வழக்கு பதிந்து இந்த பெண்ணின் இறப்பு காதல் விவகாரமா, கொலையா, தற்கொலையா வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்று விசாரணை நடைபெற்று வருகிறது.