Private bus Incident ... Terrifying CCTV footage!

எடப்பாடி அருகே தனியார் பேருந்தும், கல்லூரி பேருந்தும் மோதிக்கொண்ட சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

சேலம் மாவட்டம் எடப்பாடி பேருந்து நிலையத்திலிருந்து தனியார்பேருந்து ஒன்று முப்பதுக்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. அப்பொழுது எதிரே வந்த தனியார் கல்லூரி பேருந்து எதிர்பாராதவிதமாக தனியார் பேருந்து மீது மோதியது. இதில் அதிர்ஷ்டவசமாக தனியார் பேருந்து புளியமரத்தில் மோதி நின்றது. தனியார் பேருந்து ஓட்டுநர் அருணாச்சலம் என்ஜின் மீது தூக்கி வீசப்பட்டார். இந்த காட்சிகள் தனியார் பேருந்தில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தது. இந்த விபத்தில் 30க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயமடைந்த நிலையில், அந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் அனைவரும் சேலம், எடப்பாடி, சங்ககிரி உள்ளிட்ட அரசு மருத்துவமனைகளில்சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்து குறித்து கொங்கணாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisment