சென்னையில் தனியார் நகர பேருந்துகளை ஒப்பந்த அடிப்படையில் இயக்க அனுமதி கொடுக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் சென்னையில் 600-க்கும் மேற்பட்ட வழித்தடங்களில் மாநகரப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. ஒரு நாளைக்கு 3,000 மேற்பட்ட மாநகர பேருந்துகள் சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் பயணிகளின் வசதிக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் மாநகரப் போக்குவரத்துக் கழகம் பயணிகளின் வசதிக்காக தனியார் பங்களிப்புடன் மாநகர பேருந்துகளை இயக்குவதற்கான நடவடிக்கைக்கு திட்டமிட்டு இருப்பதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளது. இதன் முதல்கட்டமாக 500 தனியார் பேருந்துகளை இந்த ஆண்டு இணைத்து சென்னை மக்களுக்கு பேருந்து சேவை செய்யப்படுவதற்கான திட்டமிடல் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் சென்னையில் தனியார் பேருந்துகளுக்கு அனுமதி தருவதைக் கண்டித்து நாளை அரசு பஸ் ஊழியர்கள் போராட்டம் நடத்த இருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. மாநகர போக்குவரத்துக் கழகத்தை கண்டித்து பணிமனைகள் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என சிஐடியு அறிவித்துள்ளது.