/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/dfjh.jpg)
உலகம் முழுவதும் கரோனா வைரஸ் பரவி மனித சமூகத்தை அச்சுறுத்தி வருகிறது. லட்சகணக்கான மக்கள் இந்நோய் காரணமாக பலியாகியுள்ளனர். உலகம் முழுவதும் பல மருந்து ஆராய்ச்சி நிறுவனங்கள் கரோனாவுக்கான தடுப்பு மருந்தைக் கண்டறியும் முயற்சியில் ஈடுப்பட்டுள்ளன.
தமிழகத்தை பொறுத்த வரையில் கரோனாவின் தாக்கம் அதிக அளவில் இருந்து வருகின்றது. அமைச்சர்கள், அதிகாரிகள், சட்டமன்ற உறுப்பினர்கள் என அனைவருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டு வருகின்றது. இந்நிலையில் கரோனா பாதிப்பு தொடர்பாக பிரதமர் மோடி தமிழகமுதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் தகவல்களை கேட்டறிந்துள்ளார். கரோனா தடுப்புப் பணிகள் குறித்தும் மருத்துவ சிகிச்சை விவரங்கள் குறித்தும் முதல்வர் பழனிசாமியிடம் அவர் கேட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் விரைவில் இயல்புநிலை திரும்ப அனைத்து முயற்சிகளையும் அரசு முழுவீச்சில் எடுத்து வருவதாக பிரதரிடம் முதல்வர் விளக்கம் அளித்துள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)