
பிரதமர் மோடி வரும் ஏப்ரல் 8ம் தேதி தமிழகம் வர இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காகத் தமிழகம் வர இருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது. குறிப்பாக சென்னை-கோவை இடையிலான வந்தே பாரத் ரயில் சேவை மற்றும் தாம்பரம்-செங்கோட்டை ரயில் சேவை ஆகியவற்றை தொடங்கி வைக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. மார்ச் 27 ஆம் தேதி பிரதமர் மோடி தமிழகம் வர இருப்பதாக ஏற்கனவே திட்டமிடப்பட்ட நிலையில், அந்த தேதி மாற்றி அமைக்கப்பட்டு ஏப்ரல் 8ம் தேதி வர இருப்பதாகத் தற்பொழுது தகவல் வெளியாகியுள்ளது.