nn

Advertisment

வணிகர் சங்க பேரவை தலைவர் வெள்ளையன் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் வணிகர் சங்க பேரவை தலைவர் வெள்ளையன் உடல் நலக் கோளாறு காரணமாக அனுமதிக்கப்பட்ட சிகிச்சை பெற்று வந்தார். நுரையீரல் தொற்று காரணமாக கடந்த மூன்றாம் தேதியிலிருந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அவரது மறைவை அடுத்து வணிகர் சங்க கொடிகள் அனைத்தும் அரை கம்பத்தில் பறக்க விட அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.