விழுப்புரம் மாவட்டம், சங்கராபுரம் தாலுக்கா அத்தியூர் கிராமத்தை சேர்ந்தவர் பிரியங்கா. கர்ப்பிணியான இவருக்கு பிரசவ வலி எடுத்ததால் உடனடியாக 108 அவசர ஊர்தி மூலமாக திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளார்.
ஏப்ரல் 26ந் தேதி காலை அவசர ஊர்தி திருவண்ணாமலை நோக்கி வந்துக்கொண்டு இருந்தபோது, திருவண்ணாமலை மாவட்டம், கச்சராப்பட்டு என்கிற கிராமத்தின் அருகே எதிரே வந்த போர்வெல் லாரியும், அவசர ஊர்தியும் மோதிக்கொண்டன. இதில் அவசர ஊர்தியில் பயணம் செய்த பெண், காயம்மின்றி தப்பினார்.
அப்பகுதியில் மக்கள் திரண்டனர். உடனடியாக வேறு ஒரு அவசர ஊர்தி மூலமாக மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளார். அங்கு உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு பிரசவம் பார்த்தபோது, அந்த பெண் இறந்ததாக கூறப்படுகிறது. குழந்தையும் இறந்துள்ளது. இதற்கு காரணம், விபத்து நடந்தபோது, அவர் உடலும், மனமும் அதிர்ச்சிக்குள்ளானது. இதனால் பிபி அதிகமாகி பிரசவத்தை சிக்கலாக்கியுள்ளது. இதனால் மரணித்துள்ளார் என்கிறார்கள் மருத்துவ தரப்பில்.