Skip to main content

'புரெவி' புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தயார்! - சிறப்பு அதிகாரி கருணாகரன் ஐ.ஏ.எஸ்!

Published on 03/12/2020 | Edited on 04/12/2020

 

 Precautionary measures are ready ... Special Officer Karunakaran.IAS

 

தென்கடல் இலங்கைப் பகுதியில், மையம் கொண்டுள்ள 'புரெவி' புயல் இன்று மாலை அல்லது நள்ளிரவு குமரி முதல் பாம்பன் வரை கரையைக் கடக்கலாம். அதன் காரணமாக நெல்லை, குமரி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் காற்று பலமாக வீசுவதுடன் அதிக கனமழை பெய்யலாம் என்று வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தென்மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அதற்கேற்ப தென்மாவட்டங்களின் புயல், மழை பாதுகாப்பு ஏற்பாடுகளை விரைவுபடுத்த, தென்பகுதியைத் துல்லியமாக அறிந்த நெல்லையின் முன்னாள் கலெக்டரும், தற்போதைய இணைச் செயலாளருமான கருணாகரன் ஐ.ஏ.எஸ்., அரசால் பாதுகாப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

 

2 நாட்களுக்கு முன்பாகவே நெல்லை வந்த சிறப்பு அதிகாரி கருணாகரன் புயல் பேரிடர் தொடர்பாக அனைத்து அதிகாரிகளின் கூட்டத்தைக் கூட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை விரைவுபடுத்தினார். வெள்ளம் ஏற்படும் பகுதிகளை ஆய்வு செய்தவருடன் நெல்லை கலெக்டர் விஷ்ணு உடனிருந்தார். அங்கு ஏற்கனவே ஏற்பாடு செய்யப்பட்டிருந்த புயல் தடுப்பு மையங்களை ஆய்வு செய்தவர், நாங்குநேரி, தெற்கு விஜய நாராயணம் பகுதி ஏரிகளையும், நீர் கொள்ளளவையும் ஆய்வு செய்தார். 

 

 Precautionary measures are ready ... Special Officer Karunakaran.IAS

 

அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை விரிவுபடுத்தியுள்ளார். மேலும் அங்குள்ள புயல் தடுப்பு மையங்களிலுள்ள மக்களுக்கான வசதிகள், கழிப்பிட வசதிகள், தண்ணீர் போன்றவைகள் தயார் நிலையில் உள்ளதையும் கவனித்தார். கூடுதல் வசதிக்கான உத்தரவையும் பிறப்பித்துள்ளார். தாமிரபரணியின் வெள்ளப் பெருக்கெடுக்கும் அணைகளான பாபநாசம், மணிமுத்தாறு, சேர்வலாறு உள்ளிட்ட அணைகளை மணிக்கு ஒரு முறை என 24 மணி நேரமும் கண்காணிக்கப் பொதுப் பணி துறைக்கு உத்தரவிட்டிருக்கிறார்.

 

மேலும், தூத்துக்குடியின் முக்கியப் பகுதிகளில் தண்டோரா மூலம் பாதுகாப்பு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. புயல்மழை வெள்ளம் சம்பந்தமான ஏற்பாடுகளை நெல்லை மாவட்டத்தின் கலெக்டர் நல்லமுறையில் செய்துள்ளார். கடலோரப் புயல் பாதுகாப்பு மையங்களில் அனைத்து ஏற்பாடுகளும் புனரமைக்கப்பட்டுள்ளன. நெல்லை மாவட்டத்தில் 195 பாதுகாப்பு மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. பேரிடர் மீட்புக் குழுவினர் 57 பேர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

 

 Precautionary measures are ready ... Special Officer Karunakaran.IAS

 

மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நெல்லை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், சிகிச்சைக்கான கூடுதல் மருந்து வசதிகள் தயார் நிலையில் உள்ளன. போலீசார், தீயணைப்புப் படையினர் உள்ளிட்ட அனைத்துத் துறை அதிகாரிகளும் தயார் நிலையில் உள்ளனர். அவசரக் கட்டுப்பாட்டு மையம் திறக்கப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை காரணமாக அரசு அலுவலர்கள் யாரும் விடுமுறை எடுக்க வேண்டாம் என்றார் சிறப்பு அதிகாரி. கருணாகரன் ஐ.ஏ.எஸ்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

குடித்துவிட்டு அடிக்கடி தகராறு; தந்தையைக் கொன்ற 15 வயது சிறுவன்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
incident in thoothukudi; police investigation

கன்னியாகுமரியில் பேரனின் மதுப்பழக்கத்தைத் தட்டிக்கேட்ட பாட்டி, தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், அதேபோல் மது போதையில் தாயை அடித்து துன்புறுத்தி வந்த தந்தையை 15 வயது மகனே கொலை செய்த சம்பவம் தூத்துக்குடியில் மேலும் பரபரப்பை கிளப்பி உள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் செல்சீனி காலனி பகுதியில் வசித்து வருபவர்கள் சக்தி-அனுசியா தம்பதியினர். இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். கணவர் சக்தி சமையல் செய்யும் வேலை செய்து வருகிறார்.  குடிப்பழக்கத்திற்கு அடிமையான சக்தி மது அருந்திவிட்டு அடிக்கடி மனைவி அனுசியாவை துன்புறுத்தி வந்துள்ளார். இந்நிலையில்  நேற்று இரவு வணக்கம் போல மது அருந்திவிட்டு வந்த சக்தி, மனைவி அனுசியாவை அடித்து காயப்படுத்தியுள்ளார்.

தந்தையின் இந்தச் செயலால் மன உளைச்சலில் இருந்த மூத்த மகனான 15 வயது சிறுவன், ஆத்திரத்தில் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து தந்தை சக்தி மீது சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே சக்தி உயிரிழந்தார். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது தொடர்பாக தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய போலீசார் சிறுவனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story

“ஜனநாயகமா? சர்வாதிகாரமா?” - கனிமொழி ஆவேசம்

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
Kanimozhi obsession on modi and she questioned Democracy? Dictatorship? for lok sabha election

நாடாளுமன்றத் தேர்தலையொட்டி, தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் தி.மு.க வேட்பாளர் கனிமொழி, நேற்று (16/04/2024) ஶ்ரீவைகுண்டம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ஆழ்வார்திருநகரி பேரூராட்சியில் பொதுமக்களிடம் தேர்தல் பரப்புரை மேற்கொண்டு உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். அப்போது, தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க செயலாளரும், மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சருமான அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன், ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஊர்வசி அமிர்தராஜ், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, இந்தியா கூட்டணி சார்ந்த நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இந்த தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய கனிமொழி, “அம்மையார் ஜெயலலிதா ஒருமுறை சொன்னது போல் பரம்பரை பகைக்கான தேர்தல் தான் இது. சமூக நீதிக்கும் சமூகத்தின் அநீதிக்கும் இடையே நடக்கும் தேர்தல். ஜனநாயகத்தைக் காப்பாற்ற வேண்டிய தேர்தல். ஜனநாயகமா? சர்வாதிகாரமா? என்பதை முடிவு செய்ய வேண்டிய தேர்தல் என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். ஜனநாயகத்தின் மீது பா.ஜ.க.விற்கோ நரேந்திர மோடிக்கோ துளியும் நம்பிக்கை கிடையாது. 

பாராளுமன்றத்திற்கே வராத பிரதமர் என்ற பெருமை இருக்கிறது என்றால் பிரதமர் நரேந்திர மோடியையே சேரும். என்றாவது ஒருநாள் அவர் பாராளுமன்றத்தில் பேசுகிறார் என்றால் அவரது சாதனைகளையும் எதிர்க்கட்சிகளின் குறைகளையோ பேசுவதில்லை. யார் என்ன கேள்வி கேட்டாலும், முதலில் பிரதமர் மோடி, ஜவஹர்லால் நேரு கிட்ட சண்டை போடுவார். பெட்ரோல் விலை ஏன் ஏறியது எனக் கேட்டாலும், என்ன கேள்வி கேட்டாலும் ஜவஹர்லால் நேருவிடமிருந்து ஆரம்பிப்பார். எதிர்க்கட்சியினர் அவரை எதிர்த்து கேள்வி கேட்டதால், அனைவரும் வெளியேற்றப்பட்டோம்.

Kanimozhi obsession on modi and she questioned Democracy? Dictatorship? for lok sabha election

எந்த விவாதத்திலும் அவருக்கு நம்பிக்கை கிடையாது. பத்திரிகையாளர்களை அவர் சந்திப்பதில்லை. சமூக செயல்பாட்டாளர்கள் கேட்டால் அவர்கள் மீது வழக்கு. மலைவாழ் மக்களுக்காக தனது வாழ்நாள் முழுவதும் உழைத்த 92 வயது முதியவரைத் தீவிரவாதி என வழக்குப் போட்டு சிறையில் அடைத்தனர். தமிழகத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு பெயில் கிடையாது. பா.ஜ.க.வில் உள்ள வாஷிங்மெஷினில் அக்கட்சியில் சேருபவர்கள் சுத்தம் செய்யப்படுகிறார்கள். எதிர்க்கட்சியினரை சிறையில் போடுவார்கள்.

விவசாயிகள் டெல்லிக்குள் வந்து விடக்கூடாது என்று ட்ரோன் மூலம் கண்ணீர் புகைக்குண்டு, ரோட்டில் ஆணியை பதித்துக் கொண்டு விவசாயிகளைத் தடுக்கும் ஆட்சிதான் நரேந்திர மோடி ஆட்சி. மதத்தை வைத்து, ஜாதியை வைத்து மக்களை பிரிக்கக் கூடிய ஆட்சி. ஜிஎஸ்டி போட்டு சின்ன சின்ன கடைகள், சின்ன சின்ன வியாபாரிகள், சிறு, குறு தொழில்கள் என எல்லாத்தையும் நாசமாக்கி பலரைக் கடையை மூட வைத்த ஆட்சி பா.ஜ.க ஆட்சி.

தமிழகத்தில் ஜிஎஸ்டி வரியை எல்லாம் கொண்டு போய் ஒரு ரூபாய் வாங்கிக்கொண்டு 29 பைசா மட்டுமே தரப்படுகிறது. ஆனால், பா.ஜ.க ஆட்சி செய்யும் மாநிலங்களுக்கு 3 ரூபாய் முதல் 7 ரூபாய் என வழங்கப்படுகிறது. ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெள்ள பாதிப்புகளைப் பார்வையிட வந்து எந்த நிவாரணமும் வழங்கப்படவில்லை. வெள்ளத்தில் வீடுகள் இடிந்த போது கவலைப்படவில்லை. ஆனால், கோவிலில் உண்டியலில் காசு போடாதீர்கள் தட்டில் போடுங்கள் என அறிவுரை வழங்குகிறார்.

தமிழகத்திற்கு வஞ்சனை செய்யக்கூடிய ஆட்சி பா.ஜ.க ஆட்சி. வெள்ள பாதிப்பு ஏற்பட்ட போது இங்கு வராத மோடி, தேர்தல் வந்ததும் தமிழகத்தை சுற்றிச் சுற்றி வருகிறார். பா.ஜ.கவிற்கும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கும் ஓட்டுப் போட்டுவிடக்கூடாது. பா.ஜ.க கொண்டு வந்த சட்டங்களுக்கு ஆதரவாக வாக்களித்த அ.தி.மு.க.விற்கும் சரியான பாடம் புகட்ட வேண்டும்.

பெண்களுக்கு எதிராக குற்றங்களைப் புரியும் 44 பேர் எம்.பி.யாக பா.ஜ.க.வில் உள்ளனர்.  பா.ஜ.க எம்.பிக்கு எதிராகப் போராடிய மல்யுத்த வீராங்கனைகள் மீது வழக்குகள் போடப்பட்டது. தவறு புரிந்த அவர் மீது எந்த வழக்கும் போடவில்லை. ஹிந்தி படிக்க வேண்டும் என்று சொன்ன மோடி, தேர்தல் வந்ததும் தமிழ் படிக்க வேண்டும் என்கிறார்.  மக்களுக்கு எதிராக ஆட்சி செய்யக்கூடிய பாஜக புறக்கணிக்கப்பட்டு, வீட்டுக்கு அனுப்பப்பட வேண்டும். இந்த நாட்டுக்கு அவர்கள் தேவையில்லை என்பதை மக்கள் புரிய வைக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.