Skip to main content

தள்ளிவைக்கபட்ட போலியோ சொட்டு மருந்து முகாம்... நாளை நடைபெறுகிறது

Published on 30/01/2021 | Edited on 30/01/2021

 

Postponed polio vaccination camp ... takes place tomorrow

 

நாடு முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 16 ஆம் தேதி போலியோ சொட்டு மருந்து போடுவது வழக்கம். ஆனால் இந்த வருடம் கரோனா தடுப்பூசி அறிமுகப்படுத்தப்பட்டு நாடு முழுவதும் மக்கள் பயன்பாட்டிற்கு வந்ததால், போலியோ சொட்டு மருந்து கொடுப்பது தள்ளிவைக்கப்பட்டது.

 

இந்நிலையில் நாளை (31.01.2021) நாடு முழுவதும் 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்குப் போலியோ சொட்டு மருந்து போடும் முகாம் நடைபெற உள்ளது. தமிழகத்தில் 41,053 முகாம்களில் போலியோ சொட்டு மருந்து போட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த முகாம் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது. தமிழகம் பொறுத்தவரை 70.20 இலட்ச குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இதில் இரண்டு இலட்சத்திற்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஈடுபட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

சார்ந்த செய்திகள்

Next Story

‘5 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் பெற்றோர்கள் கவனத்திற்கு’ - தமிழக அரசு முக்கிய அறிவிப்பு

Published on 28/02/2024 | Edited on 28/02/2024
Attention of parents of children under 5 years of age TN Govt

தமிழகம் முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாம் மார்ச் 3 ஆம் தேதி (03.03.2024) ஞாயிற்றுக் கிழமையன்று நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் மற்றும் முக்கிய இடங்கள் என மொத்தம் 43 ஆயிரத்து 51 மையங்களில் போலியோ சொட்டு மருந்து முகாமுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் 57 லட்சத்து 84 ஆயிரம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு அனைத்து ஏற்பாடுகளும் விரிவாகச் செய்யப்பட்டு வருகின்றன. மேலும் யுனிசெஃப், உலக சுகாதார நிறுவனம் மற்றும் பன்னாட்டு ரோட்டரி சங்கங்கள் போலியோ சொட்டு மருந்து முகாம் பணிகளுக்கு உறுதுணையாக இருந்து வருகின்றன.

இந்நிலையில் அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “சொட்டு மருந்து வழங்கும் மையங்கள் காலை 07.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை செயல்படும். 5 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் (03.03.2024) போலியோ சொட்டு மருந்து வழங்கப்படும். தடுப்பு மருந்து கொடுக்கும் முன் சோப்பு கொண்டு கை கழுவுவது மற்றும் கிருமி நாசினியான சானிடைசர் உபயோகப்படுத்துவது கட்டாயமாகும். தேசிய தடுப்பூசி அட்டவணைப்படி ஓரிரு நாட்களுக்கு முன் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டிருந்தாலும் முகாம் நாளில் மீண்டும் சொட்டு மருந்து வழங்கப்பட வேண்டும்.

அண்மையில் பிறந்த குழந்தைகளுக்கும் முகாம் அன்று சொட்டு மருந்து கொடுப்பது அவசியமாகும். விடுபடும் குழந்தைகளைக் கண்டறிய சொட்டு மருந்து வழங்கப்படும் குழந்தைகளுக்கு இடது கை சுண்டு விரலில் மை வைக்கப்படும். முகாம் நாளன்று போலியோ சொட்டு மருந்து வழங்க தனியார் மருத்துவர்களும், மருத்துவமனைகளும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். புலம்பெயர்ந்து வாழும் பெற்றோர்களின் குழந்தைகளுக்கும் முகாம் நாளன்று போலியோ சொட்டு மருந்து வழங்கப்படும். போலியோ சொட்டு மருந்து வழங்கும் பணிகளுக்காக 3000க்கும் மேற்பட்ட அரசு வாகனங்கள் ஈடுபடுத்தப்படும். போலியோ சொட்டு மருந்து முகாம் நாளில் பயணிக்கும் குழந்தைகளின் வசதிக்காக முக்கிய பேருந்து நிலையங்கள், இரயில் நிலையங்கள், சோதனைச் சாவடிகள், விமான நிலையங்களில் பயண வழி மையங்கள் சொட்டு மருந்து வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நடமாடும் குழுக்கள் மூலமாகத் தொலைதூரம் மற்றும் எளிதில் செல்ல முடியாத பகுதிகளில் வசிக்கும் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Attention of parents of children under 5 years of age TN Govt

போலியோ சொட்டு மருந்து மையங்களில் 2 இலட்சத்திற்கும் மேற்பட்ட சுகாதார பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் ஈடுபடுத்தப்படுவார்கள். போலியோ சொட்டு மருந்து முகாம்கள் தமிழ்நாட்டில் சிறப்பாக நடைபெறுவதால் தமிழ்நாடு தொடர்ந்து 20 ஆண்டுகளாக போலியோ இல்லாத நிலையை அடைந்துள்ளது. இந்த நிலையை தக்கவைத்துக் கொள்ளவும். குழந்தைகளை போலியோ வைரஸ் பாதிப்பிலிருந்து பாதுகாப்பதும் மிகவும் இன்றியமையாததாகும். எனவே, பெற்றோர்கள் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி தங்கள் குழந்தைகளுக்கு விடுபடாமல் போலியோ சொட்டு மருந்து வழங்கும்படி அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

பிப்.27ல் போலியோ சொட்டு மருந்து முகாம்

Published on 23/02/2022 | Edited on 23/02/2022

 

n

 

வரும் 27ம் தேதி போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

 

தமிழகம் முழுவதும் வரும் ஞாயிறு (27ம் தேதி) அன்று போலியோ சொட்டு மருந்து போடப்படும் என்று தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. சொட்டு மருந்து முகாம் காலை 7மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெறும் எனக் கூறப்பட்டுள்ளது. மேற்கண்ட நாளில் கரோனா பாதுகாப்பு நடைமுறைகள் தீவிரமாக கடைபிடிக்கப்படும் என்றும், முகக்கவசம் அணிந்து வரும் பெற்றோர்கள் மட்டுமே முகாம் நடைபெறும் இடத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முகாம் மூலம் 5 வயதிற்குட்பட்ட 42.3 லட்சம் பேருக்கு சொட்டுமருந்து போடப்பட இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.