ரயிலில் வைத்து பெண் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள பாந்த்ரா ரயில் நிலையத்திற்கு கடந்த சனிக்கிழமை அன்று ரயில் மூலம் தனது மகனுடன் வந்து இறங்கியுள்ளார். அதன்பிறகு மறுபுறம் இருந்த ரயில் வழியே மறுபக்கம் செல்வதற்காக நுழைந்துள்ளார். ரயில் காலியாக இருந்த நிலையில் அங்கிருந்த போர்ட்டர் ஒருவர் அந்த பெண்ணை வழி மறுத்து வலுக்கட்டாயமாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட அந்த பெண் பாந்த்ரா காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் ஆய்வு நிலையம் முழுவதும் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வுக்கு உட்படுத்தி விசாரணையை மேற்கொண்டு வந்தனர். அதன்பின்னர் சிசிடிவி காட்சியில் பதிவாகி இருந்த போர்ட்டரின் முகத்தை பாதிக்கப்பட்ட பெண் அடையாளம் காட்டியதாகவும், அதன் பின்னர் அவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருவதாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.