nakkheeran

நக்கீரன் ஆசிரியர் கோபால் கைது செய்யப்பட்ட்டதற்குபூவுலகின் நண்பர்கள் அமைப்பு தனது வலுத்த கண்டனத்தை பதிவு செய்துள்ளது.அந்த கண்டன அறிக்கையில்,

Advertisment

தமிழக ஆளுநரின் புகாரின் கீழ் நக்கீரன் கோபால் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அறிகிறோம். இது ஜனநாயக நாடு, ஆள்பவர்களை கேள்விகேட்க்கும் அதிகாரம் எல்லோருக்கும் வழங்கியுள்ளது இந்திய அரசியல் அமைப்பு சட்டம், அதுவும் குறிப்பாக பத்திரிக்கைகளுக்கு அந்த தார்மீக கடமையும் உரிமையும் உள்ளது. செய்தி வெளியிட்டதற்காக தேச துரோக பிரிவின் கீழ் கைதுசெய்வது பாசிச நடைமுறையேயாகும். ஜனநாயகம் தழைத்தோங்க, மக்களுக்கு ஜனநாயாகத்தின் மீதான நம்பிக்கையை சிதைக்கும் வழிமுறையே இந்த கைது நடவடிக்கை.

Advertisment

ஆளும் அரசுகள்/ஆளுநர்கள் செய்யும் தவறுகளை விமர்சிப்பதும் நல்ல விஷயங்களை பாராட்டுவதும்தான் ஊடங்கங்களின் கடமை. சுதந்திரமாக செயல்படவேண்டிய ஊடகங்கள் மீது, அதன் செயல்களை முடக்கும்விதமாக வழக்குகள் பதிவு செய்வதற்கு எங்களின் வன்மையான கண்டனங்கள்.

தமிழக அரசு உடனடியாக வழக்குகளை வாபஸ் வாங்கவேண்டுமென்றும், திரு கோபால் அவர்களையும் அவருடன் கைது செய்யப்பட்டுள்ள அனைவரையும் உடனடியாக விடுதலை செய்யுமாறு கோருகிறோம் என கூறபட்டுள்ளது.

Advertisment