காணும் பொங்கல் கொண்டாட்டத்தையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் சிறப்பான பாதுகாப்பு ஏற்பாடுகள் சென்னை காவல்துறையினரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
காணும் பொங்கல் ஆண்டுதோறும் கொண்டாடப்படும் ஒரு நிகழ்வாகும். சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் உள்ள மக்கள் மெரினா கடற்கரையில் ஒன்று கூடி இந்த காணும் பொங்கலை கொண்டாட உள்ளனர். அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை சென்னை மாநகர காவல் துறை ஏற்பாடு செய்துள்ளது. நேப்பியர் பாலம் முதல் கலங்கரை விளக்கம் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த உள்ளதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.
ஒட்டுமொத்தமாக சென்னையில் முக்கிய இடங்களில் சுமார் 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்பிற்காக பணியமர்த்தப்பட்டுள்ளனர். இதுதவிர சென்னை மெரினா கடற்கரையில் உழைப்பாளர் சிலை முதல் கலங்கரை விளக்கம் வரை உள்ள மூன்று கிலோமீட்டர் தூரத்திற்கு கடலில் குளிக்க தடை விதிக்கப்பட்டு அதற்காக தடுப்புகள் அமைக்கப்பட்டு உள்ளது. பொதுமக்கள் கடலுக்குள் செல்லாதவாறு தடுப்புகள் அமைக்கப்பட்டு உள்ளது.
கடலோர காவல்படை மட்டுமல்லாமல் தீயணைப்பு துறை ஆகியோர் ஆயத்த நிலையில் உள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.