Pongal gift announcement for government employees

2024ஆம் ஆண்டு பொங்கல் பரிசாக தமிழக அரசு சார்பில் அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு மையங்களில் வசிக்கக் கூடிய குடும்பங்களுக்குப் பொங்கல் பரிசு தொகுப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக 238 கோடியே 92 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு சார்பில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி 2 கோடியே 19 லட்சத்து 57 ஆயிரத்து 402 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அரசு ஊழியர்களுக்கும் பொங்கல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. சி மற்றும் டி பிரிவு பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு மிகை ஊதியம் பொங்கல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. சி, டி பிரிவு பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 3000 ரூபாய் என்ற உச்சவரம்புக்கு உட்பட்டு மிகை ஊதியம் வழங்கப்படும். தொகுப்பூதியம், சிறப்பு கால முறை ஊதியம் பெறும் பணியாளர்களுக்கு ஆயிரம் ரூபாய் மிகை ஊதியம் வழங்கப்படும் எனவும், 2022-23 ஆண்டில் குறைந்தபட்சம் 240 நாட்கள் பணிபுரிந்த முழு நேர, பகுதி நேர பணியாளர்களுக்கு ஆயிரம் ரூபாய் சிறப்பு மிகை ஊதியம் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் சி, டி பிரிவை சேர்ந்த ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு 500 ரூபாய் பொங்கல் பரிசாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து வகை தனி ஓய்வூதியதாரர்களுக்கும் 500 ரூபாய் பொங்கல் பரிசாக வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.