Skip to main content

சில நிமிடங்களில் விற்று தீர்ந்த பொங்கல் முன்பதிவு டிக்கெட்டுக்கள்!

Published on 12/09/2019 | Edited on 12/09/2019


தீபாவளி, பொங்கல் பண்டிகைககளின் போது சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் வசிப்பவர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். இதனால் ரெயில்கள், பேருந்துகளில் பயணிகள் கூட்டம் அலை மோதும். ரெயில் டிக்கெட் முன்பதிவு காலம் தற்போது 120 நாட்களாக நீட்டிக்கப்பட்டதையடுத்து, ஜனவரி 10ம் தேதி பயணிப்பதற்கான ரயில் டிக்கெட்டுகளை இன்று (செப்.12) முன்பதிவு செய்யலாம் என்று அறிவிப்பு வெளியிடப்படிருந்தது. இதனால், எழும்பூர், சென்ட்ரல் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் பொதுமக்கள் காத்திருந்து முன் பதிவு செய்தனர்.



காலை 8 மணிக்கு முன் பதிவு துவங்கியதும் பொதுமக்கள் டிக்கெட்டுகளை புக்கிங் செய்ய நீண்ட வரிசையில் நின்றனர். ஆனால், சில நிமிடங்களிலேயே தென் மாவட்டங்களுக்கு செல்லும் முக்கிய ரெயில்களில் டிக்கெட்டுகள் விற்று தீர்ந்தன. இதனால் பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். ஜனவரி 11ம்தேதிக்கான முன்பதிவு செப்.13ம் தேதியும், ஜனவரி 12ம் தேதிக்கான முன்பதிவு செப்.14ம் தேதியும், ஜனவரி 13ம் தேதி (திங்கட்கிழமை) முன்பதிவு செப்.15ம் தேதியும் டிக்கெட் முன்பதிவு செய்யலாம். பொங்கலுக்கு முந்தைய நாள் ஜனவரி 14-ம் தேதிக்கான முன்பதிவு செப்.16ம் தேதி தொடங்கும். அதேபோன்று சொந்த ஊரில் இருந்து திரும்பும் போது, ஜனவரி 17-ம் தேதிக்கான முன்பதிவு செப்.19ம் தேதியும், ஜனவரி 18ம் தேதிக்கான முன்பதிவு செப்.20ம் தேதியும், ஜனவரி 19ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) முன்பதிவு செப்.21ம் தேதியும் தொடங்கும் என்று அறிவிக்கப்ட்டுள்ளது.

 

சார்ந்த செய்திகள்