Skip to main content

வீட்டு தோட்டத்தில் புதைத்து வைத்திருந்த பாண்டி சரக்கு

Published on 27/01/2023 | Edited on 27/01/2023

 

சீர்காழி அருகே வீட்டுத் தோட்டத்தில் புதைத்து வைத்திருந்த 805 லிட்டர் பாண்டிச்சேரி சாராயத்தையும், 1125 பாக்கெட் சாராயத்தையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். 

 

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே திருமுல்லைவாசல் கிராமத்தைச் சேர்ந்தவர் லட்சுமி. அவரது வீட்டு தோட்டத்தில் பாண்டிச்சேரி சாராயம் கேன்களில் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக மத்திய நுண்ணறிவு பிரிவு போலீசாருக்கும், மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசாருக்கும் தகவல் கிடைத்தது.  இதனை அடுத்து மதுவிலக்கு பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் கலை அதிரவன் மற்றும் சீர்காழி மதுவிலக்கு பிரிவு ஆய்வாளர் செல்வி தலைமையிலான போலீசார் அங்கு சென்று சோதனை செய்தனர்.

 

சோதனையில் வீட்டின் பின்புறம் புதைத்து வைக்கப்பட்டிருந்த 23 கேன்களில்  805 லிட்டர் தண்ணீர் கலக்கப்படாத பாண்டிச்சேரி சாராயமும், 1125 சாராய பாக்கெட்டுகளும்  பதுக்கி வைக்கப்பட்டிருந்ததும் தெரியவந்தது. அதனை போலீஸார் பறிமுதல் செய்தனர். மேலும், வீட்டின் உரிமையாளர் லட்சுமி, சாராயம் விற்பனையில் ஈடுபட்ட பாரதி உள்ளிட்ட இரண்டு பேரை கைதுசெய்துள்ளனர். இதன் மதிப்பு சுமார் ரூ. 3 லட்சம் என்கிறார்கள் போலீசார்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

‘எங்களை விவசாயம் செய்யவிடுங்கள்’ - போராடும் பொதுமக்கள்!

Published on 03/04/2024 | Edited on 03/04/2024
The public protest against to be set up power plant in mayiladuthurai

சீர்காழி அருகே நெப்பத்தூர் கிராமத்தில் பவர் பிளான்ட் அமைக்கப்போவதை கண்டித்து போராட்டத்திற்கு ஆயத்தமாகும் பொதுமக்களிடம் வட்டாட்சியர் அமைதிப் பேச்சுவார்த்தையை நடத்தியுள்ளார்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த நெப்பத்தூர் என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில், மெகா கிரைடு வோட்டர்ஸ் என்ற பவர் பிளான்ட் அமைப்பதற்கு நிலம் கையகப்படுத்தப்பட்டு, மேற்கொண்டு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பவர் பிளான்ட், தங்களது கிராமத்தில் அமைந்தால் தங்களின் விவசாயமும், வாழ்வாதாரமும் பறிபோகும் என எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் நிர்வாகத்திடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். விவகாரத்தின் வீரியம் அறிந்த சீர்காழி வட்டாட்சியர் இளங்கோவன் தலைமையில் சீர்காழி வட்டாட்சியர் அலுவலகத்தில் கிராம மக்கள் மற்றும் பவர் பிளான்ட் நிர்வாகிகளுடன் அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

அப்போது பொதுமக்கள் கூறுகையில், “இந்த பவர் பிளான்ட் அமைய உள்ள இடம் முழுவதும் விவசாயம் நடைபெறக்கூடிய இடமாக உள்ளது. மேலும், பவர் பிளாண்ட் அமைப்பது தொடர்பாக கிராமத்திலும், மற்ற எந்த துறையிலும் அனுமதி பெறவில்லை. எனவே, இந்த பகுதியை ஆய்வு செய்த பிறகு அனுமதி வழங்க வேண்டும். அதன் பிறகு, பவர் பிளான் அனுமதி வழங்கும் பட்சத்தில் இது தொடர்பான நன்மை, தீமைகளை கிராம பொதுமக்களிடம் துறை சார்ந்த அலுவலர்கள் விளக்கி கூற வேண்டும்” என கிராம மக்கள் சார்பாக தெரிவிக்கப்பட்டது. 

The public protest against to be set up power plant in mayiladuthurai

அதன் பின்னர், மக்களின் கோரிக்கைகளை ஏற்று, பவர் பிளான்ட் அமைப்பது தொடர்பாக அனுமதி பெற வேண்டிய அனைத்து துறைகளிடமிருந்தும் அனுமதி பெற்று, பிறகு கிராம ஊராட்சியில் அனுமதி பெற்று தேர்தல் நடத்தை விதிமுறைகள் முடிவடைந்த பின்பு சீர்காழி வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தி தொடர் நடவடிக்கை மேற்கொள்ளப்படும், என வட்டாட்சியர் தலைமையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Next Story

“இரும்புக் கரம் கொண்டு ஒடுக்காவிடில்...” - கமல்ஹாசன் கண்டனம்

Published on 06/03/2024 | Edited on 06/03/2024
kamal about pudhucherry child issue

புதுச்சேரி மாநிலம் சோலை நகர் பகுதியைச் சேர்ந்த ஒன்பது வயது சிறுமி ஒருவர் அரசு பள்ளியில் ஐந்தாம் வகுப்பு பயின்று வந்தார். கடந்த சனிக்கிழமை வழக்கம் போல தெருவில் தனது நண்பர்களுடன் விளையாட சென்றார். ஆனால், சிறுமி மாலை ஆகியும் வீடு திரும்பாததால், சிறுமியின் பெற்றோர் பல இடங்களில் தேடினர். சிறுமி காணாமல் போனது குறித்து முந்தியால்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர். போலீசார் அக்கம்பக்கத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து சிறுமியை தேடி வந்தனர். அதனடிப்படையில் நேற்று மதியம் அங்குள்ள அம்பேத்கர் நகர் சாக்கடை கால்வாயில் சந்தேகத்திற்கிடமாக மூட்டை ஒன்று கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக அங்கு சென்ற போலீசார் மூட்டையை கைப்பற்றிப் பிரித்து பார்த்த போது அதில் சிறுமி கை, கால்கள் கட்டப்பட்டு கிடந்தார்.

இந்த கொலையில் கஞ்சா குடிக்கும் இளைஞர்கள் சிறுமியின் கை கால்களை துண்டு துண்டாக வெட்டி கொலை செய்துள்ளனர் என சிறுமியின் தந்தை பேசும் ஆடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. விசாரணையில் அந்த பகுதியைச் சேர்ந்த கருணாஸ் என்ற 19 வயது இளைஞன் மற்றும் அவனுக்கு உடந்தையாக விவேகானந்தன் (59) என்ற இரண்டு பேரும் சிறுமியை கடத்திச் சென்று விவேகானந்தன் வீட்டில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்ய முற்பட்டபோது, சிறுமி மயங்கி விழுந்துள்ளதால் அவரை கொலை செய்து மூட்டை கட்டி சாக்கடையில் வீசி இருப்பது தெரியவந்தது. 

இந்தச் சம்பவம் புதுச்சேரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் சமூக வலைத்தளங்கள் மூலம் பலரும் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றன. அந்த வகையில் நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், எங்கே போகிறோம்? என்ற தலைப்பில் நிறைய சம்பவங்களின் மேற்கோள்காட்டி கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டிருப்பதாவது, “புதுச்சேரியில் 8 வயது சிறுமி கடத்திக் கொல்லப்பட்டு சாக்கடையில் வீசப்பட்டிருக்கிறாள். உலகின் பாதி நாடுகளைச் சுற்றிப் பார்த்துவிட்டு இந்தியாவிற்கு வந்த வெளிநாட்டுப் பெண்ணை ராஞ்சியில் ஒரு கும்பல் வன்புணர்வு செய்திருக்கிறது. மங்களூருவில் காதலிக்க மறுத்த பள்ளி மாணவியின் முகத்தில் ஆசிட் வீசப்பட்டுள்ளது. சென்னையில் காதல் திருமணம் செய்துகொண்ட பட்டியலினச் சமூகத்தைச் சேர்ந்த இளைஞன் பெண்ணின் சகோதரனால் கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்டுள்ளான். குஜராத், தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் பல கோடி மதிப்பிலான போதைப் பொருட்கள் தொடர்ந்து பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன. 

ஒரு சமூகமாக நாம் எங்கே சென்று கொண்டிருக்கிறோம் எனும் ஆழமான ஐயத்தை இந்தச் சம்பவங்கள் ஏற்படுத்துகின்றன. ஒருபுறம் வளர்ச்சி, வல்லரசு, நல்லாட்சி என்று பெருமை பேசிக்கொண்டிருக்கிறோம். மறுபுறம் பெண்களுக்குப் பாதுகாப்பற்ற, போதையின் பிடியில் சீரழிகிற, சாதி மத வெறி பிடித்தாட்டுகிற சமூகமாக மாறிக்கொண்டிருக்கிறோம். மானுட நேயத்தைத் தொலைத்துவிட்டு மிருக நிலைக்குத் திரும்புவதை வளர்ச்சி என்று கருத முடியுமா? குற்றங்கள் எதுவாயினும், அதன் காரணிகள் எவையாக இருந்தாலும் எல்லாவற்றுக்குப் பின்னாலும் இருப்பது மனிதத்தன்மையை மரத்துப்போகச் செய்யும் போதைவஸ்துகள்தான். போதை வஸ்துகள் சகஜமாகப் புழங்கும் தேசத்தில் பெண்களும் குழந்தைகளும் பாதுகாப்பாக வாழவே முடியாது என்பது நிதர்சனம். இந்தச் சீரழிவை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்காவிடில் எதிர்காலம் நம்மை மன்னிக்காது. போதைப் பொருட்களுக்கு எதிரான நமது குரல் வலுக்கட்டும். சமூகத்தைச் சீரழிக்கும் போதைக் கும்பலுக்கு எதிராக நம் எல்லோரது கரங்களும் இணையட்டும். போதையில்லா தேசத்திற்குப் பாதை போட ஒவ்வொருவரும் களமிறங்குவோம்” என குறிப்பிட்டுள்ளார்.