Pollachi case; 9 people present in person ..!

கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் கல்லூரி மாணவி ஒருவர் அளித்த புகாரில் பெண்களை ஆபாச வீடியோ எடுத்து, பாலியல் வன்கொடுமை செய்து மிரட்டி நகை, பணம் பறிப்பில் சிலர் ஈடுபட்டு வருவதை நக்கீரன் வெளியிட்டது.இந்த சம்பவம் நக்கீரன் மூலம் வெளியாகி நாட்டையே உலுக்கியதையடுத்து, இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது.

Advertisment

இந்த வழக்கு தொடர்பாக திருநாவுக்கரசு, சபரிராஜன், சதிஷ், வசந்தகுமார், மணிவண்ணன், ஹேரேன் பால், பாபு மற்றும் அதிமுகவைச் சேர்ந்த அருளானந்தம், அருண்குமார் ஆகிய 9 பேரை சிபிஐ கைது செய்தது.

Advertisment

இதுவரை 8 இளம்பெண்கள் புகார் கொடுத்துள்ளனர்.இன்று மீண்டும் வழக்கு விசாரணைக்குக் கோவை மகிளா நீதிமன்றத்தில் வந்தது.அப்போது, வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள 9 பேரும் நீதிமன்றத்தில் நேரடியாக ஆஜர்ப்படுத்தப்பட்டனர்.அப்போது, ஏற்கனவே, கைது செய்யப்பட்ட 9 பேருக்கும் கூடுதல் குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்டிருந்த நிலையில்,விடுபட்ட சில நகல்களான பாதிக்கப்பட்ட பெண்கள் அளித்த வாக்குமூலத்தின் நகல்கள் வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, 28ம் தேதிக்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.