Published on 24/11/2022 | Edited on 24/11/2022

தனியார் பள்ளிகளில் அரசியல், சாதி, மதம் தொடர்பான கூட்டங்கள் மற்றும் முகாம்களை நடத்தக்கூடாது என மெட்ரிகுலேஷன் பள்ளி இயக்ககம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக மெட்ரிகுலேஷன் பள்ளி இயக்ககம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் 'தனியார் பள்ளி சட்டத்தில் அரசியல், சாதி, மதம் சார்ந்த நிகழ்ச்சிகள் நடத்தக்கூடாது என விதிமுறை உள்ளது. விதியை மீறி நடத்தப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்க சட்டத்தில் இடம் உள்ளது' என தெரிவித்துள்ளது. சென்னை அண்ணாநகரில் உள்ள தனியார் பள்ளியில் வரும் 26 மற்றும் 27ஆம் தேதிகளில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு சார்பில் முகாம் நடத்தப்படுவதாக தகவல்கள் வெளியான நிலையில் மெட்ரிகுலேஷன் பள்ளிக் கல்வி இயக்ககம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.