/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/617_3.jpg)
திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் தாலுகா, துருகம் கிராமத்தை சேர்ந்த மூர்த்தி மகன் 25 வயதான செல்வம், கலசப்பாக்கம் தாலுகா, எஸ்.எம். நகரைச் சேர்ந்த ஏழுமலை மகன் 25 வயதான சரவணராஜி ஆகிய இருவரும், கலசப்பாக்கம் தாலுகா,புதுப்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த முருகேசன் மகன் சிவகுமார் வயது 24 என்பவரிடம் காவல் துறையில் காவலர் வேலை வாங்கித்தருவதாக ரூபாய் 2,25,000 பணத்தை வாங்கிக்கொண்டு ஏமாற்றியுள்ளனர்.
இது தொடர்பாக சிவகுமார் அளித்த புகாரின் பேரில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிபிசக்கரவர்த்தி உத்தரவின் அடிப்படையில்,மாவட்ட குற்றப்பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் (பொறுப்பு) சரவணகுமார் தலைமையில், திருவண்ணாமலை தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் கோவிந்தசாமி மற்றும் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் இருவரையும் கைது செய்து விசாரித்ததின் பெயரில், இதேபோன்று 21 நபர்களிடம் காவல் துறையில் காவலர் பணி வாங்கித் தருவதாக ஏமாற்றி சுமார் 30 லட்சம் பணத்தை ஏமாற்றியது தெரியவந்தது. அவர்களிடமிருந்து 3 கார், 21 நபர்களின் அசல் பத்தாம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு மாற்றுச் சான்றிதழ்கள் கைப்பற்றப்பட்டது. அவர்களை சிறையில் அடைத்துள்ளனர். இவர்களை முறையாக விசாரித்தால், இந்த இளைஞர்களுக்கு பின்னால் உள்ள காவல்துறையை சேர்ந்த சில அதிகாரிகள் சிக்குவார்கள் என்கிறார்கள் விபரம் அறிந்த காவல்துறை அதிகாரிகள்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2019-02/02 Raja.jpg)