Police shocked by yoPolice shocked by youth's activity uth's activity

கரோனா ஊரடங்கு அமலுக்குவந்தது முதல் டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டுள்ள நிலையில் மொத்தமாக மது பாட்டில்கள் வாங்கி வைத்திருந்த பலரும் ஒரு குவாட்டர் ரூ.500 வரை விற்பனை செய்துவருகின்றனர். இந்த நிலையில் கள்ளச்சாராயம் காய்ச்சும் கும்பல் அதற்கான வேலைகளை தொடங்கிவிட்டது.

Advertisment

புதுக்கோட்டை மாவட்டம், வடகாடு காவல் சரகம் கருக்காகுறிச்சி கிராமத்தில் வழக்கம்போல சாராய ஊறல்கள் அதிகமாக அழிக்கப்பட்டுவருகிறது. டாஸ்மாக் மூடியதும் கருக்காகுறிச்சி கிராமத்தில் பழைய சாராய வியாபாரிகள் பேரல்கள் வாங்கிவந்து காட்டுப் பகுதியில் புதைத்து> சாராய ஊறல் போட்டுள்ளதாக தகவல் அறிந்து மாவட்டக்காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் தலைமையில் சோதனை செய்தனர். அப்போது முதல் நாளே சுமார் 3 ஆயிரம் லிட்டர் ஊறல் அழிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து 10 நாட்களில் மட்டும் அந்த ஒரே கிராமத்தில் சுமார் 10 ஆயிரம் லிட்டர் ஊறல் அழிக்கப்பட்டு, பேரல்கள் கைப்பற்றப்பட்டன. இவ்வளவு அழித்த பிறகும் தற்போது சாராயம் காய்ச்சி வெளியூர்களுக்கு விற்பனைக்கு அனுப்பிவைக்கின்றனர்.

Advertisment

இதேபோல ஆலங்குடி பாச்சிக்கோட்டையில் காட்டுப் பகுதியில் மேலக்காடு ரமேஷ்(35) என்ற இளைஞர் சாராயம் காய்ச்ச தயாராகி உள்ள தகவல் அறிந்து ஆலங்குடி போலீசார், அங்குசென்று பார்த்தபோது காட்டுப்பகுதியில் தண்ணீர் வசதி இல்லை என்பதால் டேங்கர் மூலம் விலை கொடுத்து தண்ணீர் வாங்கிச் சென்று ஊறல் போட்டிருப்பது கண்டறிந்து சாராயம் காய்ச்ச பயன்படுத்திய கேஸ் அடுப்பு, அலுமினிய பானைகள், தண்ணீர் டேங்கர் ஆகியவற்றைப் போலீசார் கைப்பற்றியுள்ளனர்.