Skip to main content

கள்ளச்சாராய மரணம்; கருக்காகுறிச்சிக்குள் நுழைந்த போலீஸ் - தொடரும் சோதனை

Published on 20/06/2024 | Edited on 20/06/2024
Police raid illegal spirit sale in Karukkakurichi

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாரயம் குடித்து 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கிக் கொண்டிருக்கிறது. சிகிச்யைில் இருப்பவர்களில் பலர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து வருகின்றனர். இறப்புகளின் எண்ணிக்கையும் மணிக்கு மணி அதிகரித்து வருகிறது. 

இந்தச் சம்பவத்தையடுத்து தமிழ்நாடு முழுவதும் காவல்துறையினர் கள்ளச்சாராய சோதனைகளைத் தொடங்கியுள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆலங்குடி சப்டிவிசனில் உள்ள கருக்காகுறிச்சி கிராமத்தில் தொடர்ந்து பலர் சாராயம் காய்ச்சி விற்கப்படுவதை போலிசார் அடிக்கடி சோதனைகள் செய்து ஊறல் பானைகள் உடைத்தாலும் தொடர்ந்து ஊறல் போடப்பட்டு சாராயம் காய்ச்சி வெளியூர்களுக்கு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ரகசிய தகவல் கிடைத்ததன் அடிப்படையில், இன்று காலை கூடுதல் போலிஸ் சூபபிரண்டு சுப்பையா தலைமையில் தனிப்படை போலிசார் கருக்காகுறிச்சி கிராமத்தில் சுமார் 25 நபர்களின் பெயர் பட்டியலுடன் ஊருக்குள் நுழைந்துள்ளனர். அதே போல மாவட்டத்தின் பல இடங்களிலும் தொடர்ந்து சோதனை நடப்பதாக கூறப்படுகிறது.

சார்ந்த செய்திகள்